search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virendra Sehwag"

    • அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக். இன்னிங்ஸில் தான் எதிர்கொள்ளும் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசுவதில் பெயர்பெற்றவர் சேவாக். உலகின் எந்த அணியை எதிர்கொண்டாலும், பேட்டிங்கில் இவர் சந்திக்கும் முதல் பந்து எப்போதும் பவுண்டரியை தொட்டு விடும்.

    இதனாலேயே பல முன்னணி பந்துவீச்சாளர்கள் இப்போதும் சேவாக் பற்றி பேசும் போது, அவரின் அதிரடி ஆட்டத்தை நிச்சயம் குறிப்பிடுவர். எதிரணி வீரர்கள் இவரை கண்டால் அச்சம் கொண்டதாக பலமுறை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இங்கிலாந்தில் சேவாக் ஆடிய இன்னிங்ஸ் ஒன்றில் குறிப்பிட்ட ஓவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    அந்த வீடியோவில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டி அது. நாங்கள் 320 அடிக்க வேண்டி இருந்தது. நான் கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தேன். சேவாக் எனக்கு பின்னால் இருந்தபடி வசில் அடித்தார். நான் அவரிடம் கடுமையாக திட்டி, நாம் 320-க்கும் அதிக ரன்களை அடிக்க வேண்டியுள்ளது, உனக்கு இது ஜோக் ஆக இருக்கிறதா என கேட்டேன்.

     


    அவர் என்னிடம் நாம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். பிறகு, போட்டி தொடங்கி நாங்கள் விக்கெட் இழப்பின்றி 74 ரன்களை துரத்தி இருந்தோம். ரோனி இரானி பந்து வீச ஆயத்தமானார். நான் சேவாக்-இடம் சென்று நாம் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுவோம். விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடுமாறு கூறினேன்.

    அவரும் சரி என கூறிவிட்டு கிரீஸ்-க்கு சென்றார். ரோனி வீசிய முதல் பந்தை மிட் ஆஃப் மேல் அடித்தார் அது பவுண்டரியாக மாறியது. நான் அவரிடம் சென்று அருமையாக ஷாட் இந்த ஓவரில் நான்கு ரன்கள் வந்துவிட்டது ரன்களை மட்டும் ஸ்டிரைக் செய்தால் போதும் என்று சேவாக்-இடம் கூறினேன். அவர் அதற்கு சரி சரி... பிரச்சினை இல்லை என்று கூறி கிரீஸ்-க்கு சென்றார்.

    அடுத்த பந்தை சேவாக் மிட் ஆன் மீது விளாசினார். அந்த பந்தும் பவுண்டரியை தொட்டது. நான் மீண்டும் அவரிடம் சென்று அருமையான ஷாட் 8 ரன்கள் கிடைத்துவிட்டது. இப்பவும் கூட சிங்கில் எடுக்கலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். அவர் மீண்டும் பிர்ச்சினை இல்லை, அப்படியே செய்யலாம் என கூறி அடுத்த பந்தை அடுக்க தரையில் உட்கார்ந்து ஸ்வீப் செய்தார். அந்த பந்து பின்புறம் பவுண்டரியை தொட்டது.

    இந்த முறை நான் அவரிடம் செல்லவில்லை. அவருக்கும் புரிந்துவிட்டது, அவர் என்னை பார்க்கவே இல்லை. அடுத்த பந்தை அவர் கவர்களின் மீது விளாசினார். அது சிக்சராக மாறியது. அந்த ஓவரின் ஐந்து பந்துகளையும் அவர் பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் சிங்கில் எடுத்தார். அப்போது என்னை கடக்கும் போது, நான் சிங்கில் எடுத்துவிட்டேன் என்று கங்குலி கூறினார்.

    ×