என் மலர்
நீங்கள் தேடியது "Vishal"
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லத்தி போஸ்டர்
அதன்படி, 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#Laththi in Cinemas this Christmas 2022 !#LaththiCharge #Laatti #LaththiFrom22ndDec pic.twitter.com/toXvfmQHij
— Vishal (@VishalKOfficial) November 18, 2022
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

லத்தி போஸ்டர்
அதன்படி, 'லத்தி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Here we go, the much awaited #LaththiTrailer release date is here,
— Vishal (@VishalKOfficial) December 9, 2022
It's 12/12/22 @ 5 PM, GB#LaththiCharge #Laththi #Laatti pic.twitter.com/3qLt5YPaIu
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லத்தி
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் விஷால் கலக்கும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் விஷாலை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடத்தினர்.
- நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தக் காரணம் குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.
விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 67-வது படம். இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சில முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஷாலை அணுகி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நிலையில் விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று விஷால் கூறியுள்ளார்.

விஷால்
இதுகுறித்து விஷால் அளித்துள்ள பேட்டியில், ''இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை சந்தித்து விஜய் படத்தில் நடிக்கும்படி கேட்டார். ஆனால் எனக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் விஜய் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டேன். ஆனாலும் எதிர்காலத்தில் விஜய் படத்தில் நடிப்பேன். எனது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை எடுத்து மக்களிடம் காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. துப்பறிவாளன் 2 படத்தில் நடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதை சொல்லி நடிக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்'' என்றார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், விஷால் நடித்துள்ள லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
- இதில் லோகேஷ் கனகராஜுக்கு பேசியது வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, ஆக்ஷன் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என எனக்கு தெரியும். எனவே, வரும் 22ஆம் தேதி வெளியாகும் லத்தி திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
- அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி.
- இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

லத்தி
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் நடிகர் விஷால் பேசியதாவது, இது விஷாலின் திரைப்படம் அல்ல. இது யுவன் சங்கர் ராஜாவின் திரைப்படம், அதற்கு அடுத்து சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் திரைப்படம். அதற்குப் பிறகு என்னுடைய திரைப்படம்.

விஜய் - லோகேஷ் கனகராஜ்
நீங்கள் எல்லாம் என்ன கேட்பீர்கள் என தெரியும். ஆனால் அதற்கு நான் பதில் கூறிவிட்டேன். லோகேஷ் கனகராஜை பார்த்து சந்தோசமாகவும் இருக்கிறது, அதேசமயம் பொறாமையவும் இருக்கிறது. உங்களை போலவே நடிகர் விஜய் வைத்து கடவுள் புண்ணியத்தில் ஒரு நல்ல கதையை நானும் இயக்குவேன் என நம்புகிறேன் என்றார்.

விஜய்
விஷால் பேசிக்கொண்டு இருக்கையில் கூட்டத்தில் இருந்து ரசிகர் ஒருவர் புரட்சி தளபதி என்று கத்தினார். அதற்கு இல்லை இல்லை, தளபதி என்றால் அவர்தான். நான் புரட்சி தளபதி இல்லை, என் பெயர் விஷால் மட்டுமே. என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'லத்தி'.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஷால்
இதையடுத்து நடிகர் விஷால் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். லத்தி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "மருது படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் அடிக்கடி கூறுவேன் நான் தனுஷ் கிடையாது. நீங்கள் தனுஷிற்கு கற்றுக் கொடுக்கும் டான்ஸை எனக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள். எனது உயரத்திற்கு நான் கீழே குனிந்து மேலே வருவதற்குள் அடுத்த சரணம் வந்துவிடும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ கண்டிப்பாக பண்ணுவாய் தயவு செய்து பண்ணு என்று கூறி பொறுமை காத்து என்னை நடனம் ஆட வைத்தார்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி.
- லத்தி திரைப்படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தற்போது நடித்துள்ள படம் லத்தி. இப்படத்தின் புரொமோஷனில் ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் நடித்த லத்தி திரைப்படம் வரும் 22-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஒவ்வொரு ஊராக சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் ஒரு 2-ம் நிலை காவலராக நடித்துள்ளேன். 8 வயது சிறுவனின் தந்தையாக நடித்துள்ளேன்.
விவாயிகளுக்கு தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். எங்கள் குழுவினர் சரியான விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கான உதவியை மேற்கொள்கின்றனர். விவசாயிகள் குறித்து சரியான திரைப்படம் எடுக்க வேண்டும். பிரச்சினைகள் குறித்து தெரிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான தீர்வுகளையும் கூற வேண்டும்.

விஷால்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது தான் அவர் தனது தந்தை பெயரை பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் வெறும் உதயாக இருந்தபோதில் இருந்தே எனக்கு தெரியும். நானும் அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்காக சேவை செய்து வருவது அரசியல் தான்.

உதயநிதி
சிறிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது மக்கள் அங்கு செல்வது குறைவாக உள்ளது. சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன. இலங்கை அகதிகள் முகாமில் எனது திரைப்படங்களை திரையிட நினைக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. எனக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ளதால் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை. திருமணம் குறித்து இப்போது முடிவெடுக்கவில்லை. விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.

லத்தி
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வீரத்துக்கோர் நிறமுண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா குரலில் மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். 'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

விஷால்
தற்போது விஷால் அளித்துள்ள பேட்டியில், ''மார்க் ஆண்டனி படத்தை முடித்து விட்டு துப்பறிவாளன் 2-ம் பாகத்தில் நடித்து நானே டைரக்டு செய்ய இருக்கிறேன். தொடர்ந்து விலங்குகளை வைத்து இரு படம் இயக்க உள்ளேன். இது எனது கனவு படம். ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்க்க விரும்புகிறேனோ அப்படி ஒரு கதையை எழுதுகிறேன். விஜய்யை சந்தித்து கதை சொல்வேன். அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கப்போவதாக வெளியான தகவல் உண்மை இல்லை. அரசியல் என்பது மக்கள் பணி. அதை இப்போதும் செய்து வருகிறேன்.

விஷால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன். திரைப்படங்களை திருட்டு இணையதளத்தில் வெளியிடுவதை அரசு நினைத்தால் உடனே தடுக்க முடியும். சென்னையில் அனைத்து வசதிகள் கொண்ட திரைப்பட நகரை உருவாக்க அமைச்சர் உதயநிதியிடம் கோரிக்கை வைப்பேன். நான் நடித்துள்ள லத்தி படத்தில் போலீஸ்காரர்களின் பிரச்சினைகள், தந்தை, மகன் பாசம் போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இருக்கும். சண்டை காட்சியில் எனக்கு அதிகம் அடிபட்டது. இந்த படத்தில் எனது நடிப்பு பேசப்படும்" என்றார்.
- 'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது.
- நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரித்திருந்தனர்.

விஷால்
'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷால் தனது மார்பில் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.

எம்.ஜி.ஆரின் டாட்டூ
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டாதா? என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
- நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மார்க் ஆண்டனி படக்குழு
இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

மார்க் ஆண்டனி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Mark Antony ????? pic.twitter.com/SwzvvcFciG
— S J Suryah (@iam_SJSuryah) January 26, 2023