search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Visiting Card"

    • பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது.
    • பயனர்களின் கவனத்தை ஈர்த்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மிராஜ் குப்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் கமிஷனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுபம் குப்தா தனது உபயோகத்திற்காக உருவாக்கி உள்ள தனித்துவமான விசிட்டிங் கார்டுகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த விசிட்டிங் கார்டில் சாமந்தி செடிகளின் விதைகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த விசிட்டிங் கார்டுகளின் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுபம் குப்தாவின் பதிவில், இனிமேல் எனது அலுவலகத்துக்கு வருபவர்கள் இந்த அட்டையை பெறுவார்கள். அதனை நடும் போது அழகான சாமந்தி செடியாக வளரும் என கூறியுள்ளார். அவரது இந்த பதிவு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றது. மேலும் பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த பதிவு பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

    சுற்றுச்சூழலை காப்பதற்கான நல்ல முயற்சி. நம் நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பொறுப்பான அதிகாரி இருப்பதற்காக பெருமைப்படுகிறேன் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், உங்களது புதுமையான யோசனை பாராட்டுக்குரியது. மறுசுழற்சி செய்யக்கூடிய அட்டைகளை எங்கு அச்சிடுவது என்பதை தயவு செய்து பகிரவும் என பதிவிட்டுள்ளார்.

    ×