என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vistara"

    • நேற்று 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 160 விமான சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டன.
    • இன்று மும்பை, டெல்லி, பெங்களூருவில் இருந்து புறப்பட்ட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இந்திய விமான நிறுவனங்களில் ஒன்று விஸ்டாரா. இந்த நிறுவனம் விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் இல்லாத காரணத்தால் விமானங்களை ரத்து செய்து வருகிறது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்தலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். தினந்தோறும் இவ்வாறு ஏற்பட்டால் நிலைமை மோசமாகும் என்பதால் டிஜிசிஏ (விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) தினசரி ரிப்போர்ட் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் அசௌகரியத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

    விமானிகள் மற்றும் விமான பணியாளர்கள் இல்லாமல் நேற்று மட்டும் விஸ்டாரா 50 விமானங்களை ரத்து செய்துள்ளது. பல விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

    ஏர்இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து விஸ்டாரா செயல்பட்டு வரும் நிலையில், விமானிகள் பிரச்சனை தொடர்பாக தற்காலிகமாக விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

    இன்று மட்டும் மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள், டெல்லியில் இருந்து புறப்பட்ட வேண்டிய 12 விமானங்கள், பெங்களூருவில் இருந்து புறப்படட வேண்டிய 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • விஸ்தாராவை ஏர்இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு இதில் 25.1 சதவீதம் பங்கு உள்ளது.
    • நேற்றுடன் விஸ்தாரா விமான சேவைகள், ஏர்இந்தியா விமான சேவையாக மாற்றப்பட்டுள்ளது.

    விஸ்தாரா விமான நிறுவனம் டாடாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைவதற்கான வேலைகளை நடைபெற்று வந்தன. அதற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்றிரவு விஸ்தாரா விமானங்கள் அனைத்தும் ஏர்இந்தியா விமானங்களாக சென்றன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து விஸ்தாரா விமானம் டெல்லிக்கு தனது கடைசி பயணத்தை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து விமான நிலைய ஸ்டாஃப்கள் ஒன்றாக நின்று விமானத்திற்கு பிரியாவிடை கொடுத்தனர்.

    ஏர்இந்தியா-விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைந்த பின் முதல் விமானம் தோஹாவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு புறப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்த பிறகு முதல் சர்வதேச விமான சேவை இதுவாகும்.

    நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏஐ2984 என்ற விமானம் புறப்பட்டது. இது உள்நாட்டிற்கான முதல் விமானம் ஆகும்.

    விஸ்தாரா ஏர்இந்தியாவுடன் இணைந்த நிலையில், சிங்கப்பூர ஏர்லைன்ஸ் இதில் 25.1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    டெல்லி விமான நிலையத்தில் விமான பயணிகளின் ஆவணங்களை சரிபார்க்க அடுத்த மாதம் ரோபோட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக விஸ்தரா நிறுவனம் தெரிவித்துள்ளது. #RADA #Vistara
    புதுடெல்லி:

    இந்திய விமான நிலையங்களில் பயணிகளின் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்களை சரிசெய்ய தனித்தனி அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் சோதனை செய்த பின்னரே விமானத்தில் பயண செய்யமுடியும். இந்நிலையில், பயணிகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் முதல்முறையாக விமான நிலையங்களில் ரோபோட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    உள்நாட்டு விமான நிறுவனமான விஸ்தரா இந்த ரோபோட்டுகளை அறிமுகம் செய்ய உள்ளன. ராடா என பெயரிடப்பட்ட இந்த ரோபோட்டுகள், பயணிகளின் ஆவணங்களை சரிசெய்து விட்டு அவர்கள் செல்ல வேண்டிய புறப்பாடு நுழைவு வாயில், சேரும் இடத்தின் வானிலை நிலவரம் மற்றும் விமான நேரம் போன்ற தகவல்களை அளிக்கும்.

    இந்த ரோபோட்டுகளின் கைகள் மட்டும் அசையும். அவை பயணிகளுடன் உரையாடும். குழந்தைகளுடன் விளையாடி அவர்களுக்கு பிடித்த பாடல் மற்றும் வீடியோக்களை இசைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் நகர்ந்து செல்லும் வகையில் நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 360 டிகிரி கோணத்தில் சுழலும். அதில் உள்ள 3 கேமிராக்கள் மூலம் உரையாடுகிறது.

    இந்த ரோபோட்டுகள் டெல்லி விமானநிலையத்தில் டெர்மினல் 3-ல் வருகின்ற ஜுலை மாதம் 5-ம் தேதி வைக்கப்பட உள்ளது. தொடக்கத்தில் சில சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்டுகள் விரைவில் பல பணிகளை செய்யும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும் என விஸ்தரா நிறுவனம் தெரிவித்துள்ளது. #RADA #Vistara

    ×