என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Viv Richards"
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் இடம்பெறவில்லை.
- விவ் ரிச்சர்ட்ஸ் பெரிய போட்டிகளில் பெரிய இன்னிங்சை விளையாடி ரசிர்களை கவர்ந்தார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக காம்ரன் குலாம், சஜித் கான், நோமன் அலி ஆகியோருக்கு இப்போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி அணியின் வெற்றியிலும் பங்காற்றினர். இதில் காம்ரன் குலாம் சதமடித்தும், நோமன் அலி 20 விக்கெட்டுகளையும், சஜித் கான் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இந்நிலையில் பாபர் அசாமிற்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் நன்றாக விளையாடுகிறார், மேலும் இரண்டு வடிவங்களிலும் அவரது பேட்டிங் சராசரியானது 50-க்கு மேல் உள்ளது. அதனால் பாபர் அசாமிடம் திறமை இருக்கிறது.
இப்போது அவர் தான் விவ் ரிச்சர்ட்ஸ் என்பதை தன் குணத்தால் உலகுக்கு நிரூபிக்க வேண்டும். ஏனெனில் விவ் ரிச்சர்ட்ஸ் பெரிய போட்டிகளில் பெரிய இன்னிங்ஸை விளையாடி ரசிர்களை கவர்ந்தார். அதுபோல தற்போது பாபர் அசாமும் பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் தற்போது பெரிய தொடர்கள் வரவிருப்பதால் பாபர் அசாமிற்கு ஓய்வு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கிறேன்.
என்று கூறினார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஜொலிக்கிறார்.
கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார். சிறந்த வீரர், டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐ.சி.சி. விருதுக்கு தேர்வான உலகின் முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி பெற்றார்.
இந்த நிலையில் விராட் கோலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். ரிச்சர்ட்ஸ், இம்ரான் கானை அவர் நினைவுப்படுத்துகிறார் என்று பாராட்டியுள்ளார்.
நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரை அருகாமையில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். விராட்கோலி ஒரு அடையாளம். முற்றிலும் மாறுபட்ட வீரர். அவரது தலைமை வேண்டும். அவரைப் போல் உழைக்க யாரும் இல்லை.
பயிற்சி பெற வருவது, ஒழுக்கம், தியாகம், தனிப்பட்ட விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் அவருக்கு நிகர் இல்லை. இப்படி ஒரு கேப்டனை பெற்றது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலி பல வழிகளில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை நினைவுப்படுத்துகிறார். அவர் தனது சொந்த வழியில் அணியை முன்னெடுத்து தலைமை தாங்குகிறார்.
பேட்டிங்கில் அவர் வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் வீரர் ரிச்சர்ட்சை நினைவுப்படுத்துகிறார். நான் பார்த்ததில் கோலி பலமடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
அவர் மேலும் மேலும் நன்றாக வளர்ந்து கொண்டு இருக்கிறார். உதாரணத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை அவர் வென்றதை குறிப்பிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விராட்கோலி கடந்த ஆண்டு 13 டெஸ்டில் 1322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். 5 செஞ்சுரியும் அடித்து இருந்தார். 14 ஒருநாள் போட்டியில் 6 சதத்துடன் 1,202 ரன் எடுத்தார். சராசரி 133.55 ஆகும்.
ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணிக்கு அவர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #RaviShastri
சர்ரே அணியுடன் விராட் கோலி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் அவருடைய கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் இருந்த விலகியது அவரது ஆட்டத்தை பாதிக்காது என்று கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
விராட் கோலி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ் கூறுகையில் ‘‘விராட் கோலி கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை பார்க்க நான் மிகவும் ஆசைப்பட்டேன். கவுன்ட்டி போட்டியில் விளையாடு வேண்டும் என்று விராட் கோலி எடுத்த முடிவு நல்ல முடிவு.
ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியாமல் போனது. மனதளவில் விராட் கோலி வலிமையானவர். அதனால் இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார்’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்