என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Vizhupuram
நீங்கள் தேடியது "Vizhupuram"
இசையமைப்பாளராக இருந்து தற்போது முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், அரசு பள்ளி ஆசிரியரை தத்தெடுத்துள்ளார். #GVPrakash
இசை அமைப்பாளராக இருந்து முன்னணி கதாநாயகனாக மாறி இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சமூக பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அவர் தற்போது விழுப்புரம் மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் உள்பட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810051623302328_1_gvp-2._L_styvpf.jpg)
இதுபோன்று போதுமான ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும். அதனால் இன்னும் பலர் முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
×
X