என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volkswagen"

    • போக்ஸ்வேகன் நிறுவனம் உலக சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • இதே போன்று இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலக சந்தையில் ஏராளமான நாடுகளில் போக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், போக்ஸ்வேகன் ஐடி. குடும்பத்தில் இருந்து இதுவரை ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    அக்டோபர் 2020 வாக்கில் போக்ஸ்வேகன் ஐடி.3 மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன வினியோகத்தை அந்நிறுவனம் துவங்கியது. தற்போது உலகளவில் கார் வினியோகத்தில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐந்து லட்சம் மைல்கல் எட்டிய செய்தி வெளியாகி இருக்கிறது. இதுதவிர மேலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றை வினியோகம் செய்யும் பணிகளில் போக்ஸ்வேகன் ஈடுபட்டு வருகிறது.

    2033 முதல் ஐரோப்பாவில் போக்ஸ்வேகன் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. ஐரோப்பாவில் 2030 முதல் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த போக்ஸ்வேகன் வாகனங்களில் 70 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவிலும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகப்படுத்த போக்ஸ்வேகன் திட்டமிட்டு வருகிறது.

    "1 லட்சத்து 35 ஆயிரம் ஐடி. கார்களை வாடிக்கையாளர்களுக்கு விரைந்து வினியோகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். எனினும், உதிரிபாகங்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலான சூழல் நிலவுவதால், உற்பத்தி திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டியாத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்." என போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் பிரிவுக்கான நிர்வாக குழு உறுப்பினர் மெல்டா அபெ தெரிவித்து இருக்கிறார்.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
    • புதிய ஸ்பெஷல் எடிஷன் டைகுன் மாடல் இந்தியாவில் இரண்டு விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் பேசன்ஜர் கார்ஸ் இந்தியா நிறுவனம் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் பியூர் வைட் மற்றும் ஆரிக்ஸ் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடல் லோட் ஸ்டில் ப்ரோடெக்‌ஷன், 180இன்ச் செப்ரிங் ஸ்டெர்லிங் சில்வர் அலாய் வீல்கள், அலுமினியம் பெடல்கள், டைனமிக் ஹப்கேப் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி-இன் பூட்லிட் மேல்புறத்தில் "Exclusive Edition" பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எல்இடி மேட்ரிஸ் ஹெட்லேம்ப்கள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், ஃபிளாட் பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆறு ஏர்பேக், TPMS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

    புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன் மாடலில் 2.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மோஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யுவி லிட்டருக்கு 12.65 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்கும் என ARAI சான்று பெற்று இருக்கிறது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 2023 ID.3 மாடலில் ஸ்டைலிங் அப்டேட்கள், புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழ்கப்படுகிறது.
    • புதிய ID.3 மாடலின் வினியோகம் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என ஃபோக்ஸ்வேகன் அறிவித்து இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய மேம்பட்ட ID.3 மாடலின் டிசைன் வரைபடங்களை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டு இருந்தது. இந்த மாடல் 2023 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் ID.3 மாடல் மார்ச் 1 ஆம் தேதி சர்வேதச சந்தையில் அறிமுகமாகும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    புதிய ஃபோக்ஸ்வேகன் கார் - ID.3 ப்ரோ எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ID.3 மாடல்- ID.3 ப்ரோ லைஃப், ID.3 ப்ரோ பிஸ்னஸ், ID.3 ப்ரோ ஸ்டைல் மற்றும் ID.3 ப்ரோ மேக்ஸ் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. டீசர் வீடியோவில் புதிய எலெக்ட்ரிக் ஹேச்பேக்-இன் டெயில் லைட் டிசைன் இடம்பெற்று இருக்கிறது.

     

    தற்போதைய டீசரில் புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் டிசைன் சற்றே மாற்றப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் ID.3 இரண்டாம் தலைமுறை மாடல் என்ற போதிலும், இதன் டிசைன் வரைபடங்கள் மூலம் இது மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது.

    வரைபடங்களில் புதிய கார் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபின் பகுதியில் புதிய 12 இன்ச் டச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. 2023 ID.3 மாடல் அதிநவீன மென்பொருள் கொண்டிருக்கிறது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 450கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
    • புதிய ஃபோக்ஸ்வேகன் சிறிய எலெக்ட்ரிக் கார் அதன் கான்செப்ட் வடிவிலேயே இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது சிறிய எலெக்ட்ரிக் கார் ID.2all மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. தற்போது கான்செப்ட் வடிவில் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் விற்பனை 2026 ஆண்டு துவங்குகிறது.

    முற்றிலும் புதிய ID.3, நீண்ட வீல்பேஸ் கொண்ட ID.Buzz மற்றும் ID.7 மாடல்கள் வரிசையில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக ID.2all மாடல் இணைய இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் ID.2all பேஸ் வேரியண்ட் விலை 25 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

     

    தற்போது கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ஃபோக்ஸ்வேகன் ID.2all, கடந்த 2021 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ID.Life மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இந்த மாடல் எதிர்கால டிசைன் கொண்டிருப்பதோடு, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MEB பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது.

    ஃபோக்ஸ்வேகன் ID.2all மாடலில் 222 ஹெச்பி பவர் வழங்கும் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேத்தை 7 நொடிகளுக்குள் எட்டிவிடும். இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கும் என தெரிகிறது.

    இதில் வழங்கப்படும் பேட்டரி விவரங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த காரின் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 10 முதல் 80 வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே போதும். இத்துடன் வீட்டிலேயே காரை சார்ஜ் செய்துகொள்ள 11 கிலோவாட் சார்ஜர் வசதியும் வழங்கப்படுகிறது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகுன் மற்றும் விர்டுஸ் மாடல்களுக்கு பிஎஸ்6 2 எஞ்சின் வழங்கப்படுகிறது.
    • புதிய மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்துகிறது. விலை உயர்வு ஃபோக்ஸ்வேகன் டைகுன், விர்டுஸ் மற்றும் டிகுவான் உள்ளிட்ட மாடல்களுக்கு பொருந்தும். இம்முறை கார்களின் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    தற்போது ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 56 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த கார் கம்ஃபர்ட்லைன், டாப்லைன் மற்றும் ஜிடி பிளஸ் என மூன்று விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ஏப்ரல் முதல் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

    விலை உயர்வு தவிர டைகுன் மாடலில் உள்ள எஞ்சின்கள் RDE விதிகள் மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றார் போல் அப்டேட் செய்யப்படுகின்றன. இவற்றுடன் புதிய காரில் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், மி-ஹோம் லேம்ப்கள் என சில புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.

     

    விர்டுஸ் செடான் மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 32 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் டாப்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் மற்றும் ஜிடி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன. விர்டுஸ் மாடலின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

    பிஎஸ்6 2 அப்டேட் மட்டுமின்றி விர்டுஸ் மாடலில் ரியர் ஃபாக் லேம்ப்கள் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. டிகுவான் மாடல் எலிகன்ஸ் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் எடிஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை தற்போது ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் விலை பிஎஸ்6 2 அப்டேட்டிற்கு ஏற்ப அதிகரிக்கப்பட இருக்கிறது.

    • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மற்றும் ஸ்லேவியா மாடல்கள் கிராஷ் டெஸ்டில் பெற்ற முடிவு விவரங்கள் வெளியாகியுள்ளன.
    • முற்றிலும் புதிய விதிகளுக்கு உட்பட்டு தற்போதைய டெஸ்டிங் செய்யப்பட்டு உள்ளன.

    குளோபல் NCAP நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடத்திய கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், ஸ்கோடா ஸ்லேவியா, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ K10 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

     

    ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலை மேம்பட்ட குளோபல் NCAP விதிகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஐந்து நடசத்திர குறியீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்கு இந்த கார் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றது. பெரியவர்கள் பாதுகாப்புக்கு விர்டுஸ் மாடல் 34-க்கு 29.71 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

    விர்டுஸ் செடான் மாடலுக்கான பாடி ஷெல் நிலையாக இருக்கிறது என சான்று பெற்றுள்ளது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், முன்புற சீட் பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், லோட் லமிடர்கள், நான்கு கூடுதல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட்கள், ஏபிஎஸ், ஏபிடி மற்றும் இஎஸ்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    • 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த காரிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது டிகுவான் எஸ்யுவி மாடலின் 2023 வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.

    2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதோடு, புதிய RDE விதிகளுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. காரின் வெளிப்புறம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டிகுவான் மாடல் நைட்ஷேட் புளூ, ஆரிக்ஸ் வைட், டால்ஃபின் கிரே, டீப் பிளாக் மற்றும் ரிஃப்ளெக்ஸ் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    காரின் உள்புறம் டூயல் டோன் கிரே இண்டீரியர் செய்யப்பட்டு, கேபின் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் போன் சார்ஜர், பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை பட்டனை க்ளிக் செய்ததும் ஆக்டிவேட் ஆகும் பார்கிங் அசிஸ்டண்ட் மிகவும் குறுகிய பாதைகளில் காரை பார்க் செய்ய உதவுகிறது.

    இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், ஹீடெட் முன்புற இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய 2023 டிகுவான் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • 2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்தது.
    • இந்த பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்படுகிறது.

    போக்ஸ்வேகன் குழுமம் சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள போக்ஸ்வேகன், ஆடி, கப்ரா, ஸ்கோடா மற்றும் போக்ஸ்வேகன் வர்த்தக பிரிவு என ஐந்து பிராண்டுகளின் எட்டு உற்பத்தி ஆலைகளில் இந்த வாகனங்கள் உற்பத்தி நடைபெற்று வந்தது.

    2018-இல் போக்ஸ்வேகன் குழுமம் அறிமுகம் செய்த மாட்யுல் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிக்ஸ் பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் ஐடி பேட்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர போக்ஸ்வேகன் குழுமத்தின் இதர எலெக்ட்ரிக் வாகனங்களிலும் இந்த பிளாட்ஃபார்ம் பயன்படுத்தப்படுகிறது.

     

    ஐடி.3, ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி, ஐடி.5 மற்றும் ஐடி.6 போன்ற மாடல்கள் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதே பிளாட்ஃபார்ம் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிளாக்ஷிப் செடான் ஐடி.7 மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த செடான் மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    தற்போது இருக்கும் பிளட்ஃபார்ம் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் மற்றொரு புதிய பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த தலைமுறை MEB+ பிளாட்ஃபார்ம் மேம்பட்ட பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்களுக்கும் அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    • புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் வேரியண்ட் ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது விர்டுஸ் செடான் மாடலின் புதிய GT DSG வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய விர்டுஸ் மாடலின் துவக்க விலை ரூ. 16 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விர்டுஸ் மாடல் தற்போது கம்பர்ட்லைன், ஹைலைன், டாப்லைன், ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய விர்டுஸ் GT DSG வேரியண்ட் டாப்லைன் AT மற்றும் GT பிளஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட EVO TSI பெட்ரோல் என்ஜின் மற்றும் ஆக்டிவ் சிலிண்டர் கட்-ஆஃப் தொழில்நுட்பம், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     

    இந்த என்ஜின் 148 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் லிட்டருக்கு 19.62 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போக்ஸ்வேகன் விர்டுஸ் GT DSG மாடல்: வைல்டு செர்ரி ரெட், சர்குமா எல்லோ, கார்பன் ஸ்டீல் கிரே, ரைசிங் புளூ, கேன்டி வைட், லாவா புளூ மற்றும் ரிப்லெக்ஸ் சில்வர் என்று ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய விர்டுஸ் GT DSG வேரியண்டில் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

    புதிய வேரியண்ட் அதன் முந்தைய வேரியண்ட்களை விட வித்தியாசப்படுத்திக் கொள்ள முன்புற கிரில், ஃபென்டர் மற்றும் டெயில்கேட் உள்ளிட்டவைகளில் GT பேட்ஜ் கொண்டிருக்கின்றன. இத்துடன் GT அனுபவம் வழங்கும் வகையில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், GT-தீம் இருக்கை மேற்கவர்கள், குரோம் விங்ஸ், ரெட் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் கிளாஸ் பிளாக் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வோக்ஸ்வேகன் நிறுவன கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • சிறப்பு சலுகைகள் நவம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர்கள் புதிய வோக்ஸ்வேகன் கார் வாங்கும் போது தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் லாயல்டி பலன்கள் வடிவில் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

    வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 60 ஆயிரமும், ரொக்க பலன்களாக ரூ. 60 ஆயிரமும் வழங்கப்படுகின்றன. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரொக்க பலன்கள் ரூ. 40 ஆயிரமும், எக்சேன்ஜ் மற்றும் லாயல்டி பலன்கள் ரூ. 40 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 

    இதே போன்று வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள் ரூ. 75 ஆயிரம் வரையிலும், எக்சேன்ஜ் போனஸ் ரூ. 75 ஆயிரமும், கார்ப்பரேட் பலன்கள் ரூ. 1 லட்சம் வரையிலும், விசேஷ பலன்களாக ரூ. 84 ஆயிரமும், ரூ. 86 ஆயிரம் மதிப்புள்ள நான்கு ஆண்டுகளுக்கான எஸ்.வி.பி. சேவையும் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை 35 லட்சத்து 17 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    • இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் உள்ளன.
    • ஸ்கோடா ஸ்லேவியா மாடலிலும் இதே அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சில வாரங்களுக்கு முன்பு டைகுன் டிரையல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சவுண்ட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய வோக்ஸ்வேகன் விர்டுஸ் சவுண்ட் எடிஷன் மாடலின் விலை ரூ. 15 லட்சத்து 52 ஆயிரம் என்று துவங்குகிறது. டைகுன் சவுண்ட் எடிஷன் விலை ரூ. 16 லட்சத்து 33 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல், இசை சார்ந்த அனுபவத்தை மேம்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சவுண்ட் எடிஷன்என்ற பெயருக்கு ஏற்றார் போல் இரு மாடல்களிலும் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்லிஃபயர் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் பவர்டு முன்புற இருக்கைகள் உள்ளன. இதே போன்ற அம்சங்கள் இரு மாடல்களின் GT பிளஸ் வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ்வேகன் போன்றே ஸ்கோடா நிறுவனமும் தனது ஸ்லேவியா மாடலில் இதே அப்டேட்களை வழங்கி உள்ளது.

    இரு கார்களின் வெளிப்புற சி-பில்லர் மற்றும் கதவுகள் அருகே ஸ்பெஷல் எடிஷன் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. டைகுன் மாடலில் காண்டிராஸ்ட் நிற ரூஃப் மற்றும் விங் மிரர்கள் வழங்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ், டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்கள்- லாவா புளூ, கார்பன் ஸ்டீல் கிரே, வைல்டு செர்ரி ரெட் மற்றும் ரைசிங் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கின்றன.

    வோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் டைகுன் சவுண்ட் எடிஷன் மாடல்களில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு கார்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் ஸ்கோடா ஸ்லேவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் மாடல்களுக்கும், டைகுன் மாடல் ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கும் போட்டியாக அமைகின்றன.

    • புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம்.
    • வோக்ஸ்வேகன் இந்தியா தலைமை செயல் அதிகாரி பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

    வோக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தையில் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வோக்ஸ்வேகன் நிறுவனம் முலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் வோக்ஸ்வேகன் நிறுவனம் என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து பாரத் மொபிலிட்டி நிகழ்வில் தனியார் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு வோக்ஸ்வேகன் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பியூஷ் அரோரா பதில் அளித்தார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன யுக்தி எங்களது ஐ.சி. என்ஜின் மாடல்களுக்கான யுக்திகளை விட அதிக வித்தியாசமாக இருந்துவிடாது. இதனால், இந்திய சந்தைக்கு ஏற்றவகையிலும், சர்வதேச வாகனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்துவோம். புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ட்ரி லெவல் பிரிவில் நிலைநிறுத்தப்படும்."

    "எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக வோக்ஸ்வேகன் குழுமம் சார்பில் பல மில்லியன் யூரோக்கள் அடங்கிய பெரும் தொகை முதீலடு செய்யப்படுகிறது. இந்த முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், புதிய வாகனங்களை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வது பற்றி திட்டமிடுவோம்," என்று தெரிவித்தார்.

    ×