என் மலர்
நீங்கள் தேடியது "Volvo"
- இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனகை்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மாடலின் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய 2022 வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 55 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் வினியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
வெளிப்புறம் புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் பிளான்க்டு-அவுட் கிரில், பூட்லிட் மீது ரிசார்ஜ் பேடஜ் கொண்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் அளவில் டூயல் டோன் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பரில் பிளாக் நிற கிளாடிங், செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

காரின் உள்புறத்தில் 12 இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், மெமரி ஃபன்ஷன், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 418 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 150 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 28 நிமிடங்களே ஆகும்.
- வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது.
இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் XC40 ரிசார்ஜ் ஒரு ஆண்டுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே துவங்க இருந்தது. எனினும், வால்வோ நிறுவனம் தனது காரை இறக்குமதி செய்ய முடிவு எடுத்த காரணத்தால் இதன் விற்பனை தாமதமாகி போனது.
தற்போது வால்வோ நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு ஜூலை 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த மாடலின் வெளியீடு மெட்டாவெர்ஸ் வெர்ஷனாக நடைபெற இருக்கிறது. இதனை வால்வோ நிறுவனம் வால்வோவெர்ஸ் என அழைக்கிறது.

வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் டிரைவ் டிரெயின் 405 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 4.9 நொடிகளில் எட்டி விடும். இந்த எலெக்ட்ரிக் காரில் 79 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.
கடந்த ஆண்டு வால்வோ நிறுவனம் வால்வோ XC60, வால்வோ S90 மற்றும் வால்வோ XC90 பெட்ரோல் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்தது. அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு மாற்றாக முழு எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.





இந்த தயாரிப்பு ஆலை 2019 வால்வோ எஸ்60 செடான் மாடலை உருவாக்கவே பிரத்யேகமாக துவங்கப்பட்டு இருக்கிறது. டீசல் இன்ஜின் இல்லாத முதல் வால்வோ கார் என்ற பெருமையுடன் வால்வோ 2019 எஸ்60 அறிமுகமாக இருக்கிறது. 2025-ம் ஆண்டு வாக்கில் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

புதிய போல்ஸ்டார் இன்ஜினியர் செயய்ப்பட்ட எஸ்60 மாடல் ஆர்-டிசைன் வெர்ஷனின் T8 ட்வின் இன்ஜினை விட மேம்பட்டிருக்கிறது. ஆர்-டிசைன் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று 2019 எஸ்60 செடான் மாடலில் முன்பக்க கிரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சிவப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் எஸ்60 செடான் முதற்கட்டமாக அமெரிக்காவிலும், அதன் பின் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
2019 வால்வோ எஸ்60 போல்ஸ்டார்-க்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. இது புதிய மாடலில் போல்ஸ்டார் 1 கூப் மாடலுக்கு இணையான செயல்திறன் வழங்குகிறது. வால்வோ 2019 எஸ்60 மாடலில் T8 ட்வின் இன்ஜின் அதிகபட்சம் 415 பிஹெச்பி பவர், 670 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.