என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Washing Machine"
- கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
- பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.
கண்ணூர்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
- பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிப்பு.
- சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கம்.
அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக பல நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
டெல்லி, ஐதராபாத், மும்பை, குருக்ஷேத்ரா மற்றும் கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, கேப்ரிகார்னியன் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை செய்தது.
இதில், ஒரு சோதனையின்போது வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடி ரூபாய் பணத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் கூறுகையில்," கேலக்ஸி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஹாரிசான் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடட் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு ரூ. 1,800 கோடி ரூபாய் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணம் அனுப்பியுள்ளன.
போலியான சரக்கு சேவைகள், இறக்குமதிகள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் வலை மூலம் அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.
- வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உலகின் மிகச்சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கி ஆந்திராவை சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சாய் திருமலாநீதி ஒரு சிறிய வாஷிங்மெஷினை உருவாக்கும் செயல்முறை காட்சிகள் உள்ளது. மிகவும் நுணுக்கமான கவனிப்புடன், சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை பயன்படுத்தி அவர் வாஷிங்மெஷினை ஒருங்கிணைக்கிறார். அது முழுமையாக செயல்பட தொடங்குகிறது.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றுகிறார். அதன்பிறகு ஒரு சிறிய துணியை போட்டு சலவை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது. இணையத்தில் வைரலான இந்த வீடியோ 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் சாய் திருமலாநீதியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது.
- 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மசூதிகளில் பணிபுரியும் உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பிற்படுத்தப்ப ட்டோர் மாணவர்கள் விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் நல அலுவலர் முகுந்தன் வரவேற்றார்.
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 35 உலமா க்களுக்கு ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பில் சலவைப் பெட்டிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,பேரூராட்சி கவுன்சிலர் நூர்ஜகான் பெரும்புகை ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், விடுதி காப்பாளர்கள் சங்கர், ரவி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- வேலையை சுலபமாக்கக்கூடியது என்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம்.
- அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.
வாஷிங்மெஷின் தற்போது அனைத்து வீடுகளிலும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறி விட்டது. நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை சுலபமாக்கக்கூடியதாக இருப்பதால் பெண்களிடையே இதற்கு மவுசு அதிகம். அதேசமயம் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற சலவை எந்திரத்தை தேர்ந்தெடுத்து வாங்குவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.
தானியங்கி முறையில் செயல்படும் ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷினுடன் ஒப்பிடும்போது, செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பல வகைகளில் பயன்தரக்கூடியது. இதை பயன்படுத்துவதால் மின்சாரத்தையும், தண்ணீரையும் மிச்சப்படுத்த முடியும். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரு நாளில் துவைக்கப்படும் துணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் வாஷிங்மெஷினின் கொள்ளளவைத் தேர்வு செய்ய வேண்டும். 3 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 6 முதல் 6.5கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும், 4 முதல் 6 நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 7 கிலோ கொள்ளளவு கொண்ட மெஷினும் வாங்கலாம். 7-க்கு மேற்பட்ட நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 10 கிலோ கொள்ளளவு கொண்ட வாஷிங்மெஷினும் ஏற்றதாக இருக்கும்.
சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை எந்திரமும் பழுதாகக் கூடும்.
வாஷிங்மெஷினுக்குள் துணிகளை போடுவதற்கு முன்பு, பாக்கெட்டுகளில் வைத்திருக்கும் காகிதங்கள், பணம். நாணயங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் கவனமாக வெளியே எடுத்து விட வேண்டும். இவை தண்ணீர் வெளியே செல்லும் குழாயில் அடைப்பை ஏற்படுத்துவதோடு. மெஷினில் உள்ள சிறிய பாகங்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
சலவை செய்யும்போது வாஷிங்மெஷினுக்குள் அதிக கனமான ஜீன்ஸ் பேண்ட் போன்ற துணிகளை முதலில் போட வேண்டும். பிறகு லேசான துணிகளை அவற்றின் மேலே போட வேண்டும். அப்போதுதான் எல்லா துணிகளும் சுத்தமாக துவைக்கப்படும்.
தண்ணீரை பிழிவதற்கான டிரையர் பகுதியில் துணிகளை போட்டதும் பாதுகாப்பு மூடியை பொருத்த வேண்டியது அவசியமானது. இல்லையெனில் அதிகப்படியான அதிர்வால் டிரையர் டிரம் பழுதாகும்.
டாப் லோடிங் மெஷின்களை காட்டிலும் ஃபிரண்ட் லோடிங் மெஷின்களை உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், டாப் லோடிங் மெஷின்களில் தண்ணீர் தாமாகவே கீழ் இறங்கி விடும் என்பதால், அதிக பராமரிப்பு தேவையில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்