search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்- 2.54 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
    X

    வாஷிங் மெஷினில் கட்டுக்கட்டாக பணம்- 2.54 கோடி ரூபாயை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை

    • பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிப்பு.
    • சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கம்.

    அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக பல நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    டெல்லி, ஐதராபாத், மும்பை, குருக்ஷேத்ரா மற்றும் கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, கேப்ரிகார்னியன் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை செய்தது.

    இதில், ஒரு சோதனையின்போது வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடி ரூபாய் பணத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.

    மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

    சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் கூறுகையில்," கேலக்ஸி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஹாரிசான் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடட் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு ரூ. 1,800 கோடி ரூபாய் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணம் அனுப்பியுள்ளன.

    போலியான சரக்கு சேவைகள், இறக்குமதிகள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் வலை மூலம் அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.

    Next Story
    ×