என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Water waste"
- 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
- அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது.
பல்லடம் :
பல்லடம் ராயர்பாளையத்தில் பஸ் நிறுத்தம் அருகே, பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டின் வழியாக செல்லும் 'எல் அண்ட் டி' திட்ட தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து ஏராளமான தண்ணீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:- திருப்பூர் ரோட்டில், பனப்பாளையம் முதல் மகாலட்சுமி நகர் வரை, ஏராளமான இடங்களில் 'எல் அண்ட் டி' குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி பழுது பார்ப்பதும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதும் சகஜமாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பள்ளம் உருவாகி, வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகினர். அதுபோல், ராயர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நேற்று முதல் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
இதே பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது, அதேஇடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் வீணாவது ஒருபுறம் இருக்க, ரோடு சேதமடைவதுடன், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.