என் மலர்
நீங்கள் தேடியது "Ways To Prevent Hair Fall"
- வெங்காய சாறை எடுத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி உதிராது.
- மன அழுத்தத்தை குறைப்பது முடி உதிர்தலைக் குறைக்க உதவும்.
முடி உதிர்வு பிரச்சினை என்பது இப்போது எல்லோரையும் கவலை அடையச்செய்யும் விஷயமாகும். ஒவ்வொரு தடவையும் தலை சீவும் போது நிறைய முடிகள் கொட்டினால் என்ன செய்வது? முடி உதிர்தலுக்கு உடனடி தீர்வு இல்லை என்றாலும், அன்றாட வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்கள் அதிக முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். முடி உதிர்தலுக்கான பிற காரணங்கள் மருத்துவ நிலைமைகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மரபியல் கூட இருக்கலாம். இருப்பினும், சுத்தமான உணவு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தத்தை குறைப்பது முடி உதிர்தலைக் குறைக்க உதவும்.
முடி உதிர்தலைக் குறைக்க ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உட்கொள்வது மிக முக்கியம். உங்கள் புரதத்தை அதிகரிப்பதை உறுதிசெய்து, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இறைச்சி, மீன், கொட்டைகள், பெர்ரி மற்றும் பச்சை இலை காய்கறிகள் போன்ற உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். தடுக்கும் வழிகள்:
* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்.
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* தலைமுடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது, அடர்த்தியாகும். தலைமுடி நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது; அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டையின் வெள்ளைக் கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதேபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும். அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.