என் மலர்
முகப்பு » WB Government
நீங்கள் தேடியது "WB Government"
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 28 ஆயிரம் துர்கா பூஜை கமிட்டிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் முடிவுக்கு தடை விதிக்க கொல்கத்தா ஐகோர்ட் மறுத்து விட்டது. #CalcuttaHC #WBgovernment #DurgaPujaCommittees
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது.
இந்த சலுகை அறிவிப்பின் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மம்தா பானர்ஜியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையின்படி மேற்கண்ட குழுக்களுக்கு பணம் வினியோகம் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து மாநில அரசின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மம்தா பானர்ஜி அறிவிப்பு விவகாரத்தில் தலையீடு செய்ய இயலாது. உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்ததுடன் வழக்கை தள்ளுபடி செய்தது.
இவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி டெபசிஷ் கர் குப்தா, சம்பா சர்கார் ஆகியோரை கொண்ட அமர்வு இவ்விவகாரத்தில் தீர்வு காணப்பட வேண்டிய இடம் சட்டமன்றம்தான், நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர். #CalcuttaHC #WBgovernment #DurgaPujaCommittees

×
X