என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "welfare centers"
- பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது.
- பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.
பல்லடம் :
பல்லடம் வட்டாரத்தில் உள்ள சமுதாய நலக்கூடங்களை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் ஒன்றிய செயலாளா் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து 2009-2014ம் ஆண்டுகளில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் ஏழை எளிய மக்களுக்காக நடுவேலம்பாளையம், 63.வேலம்பாளையம், காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம், வெங்கிட்டாபுரம், உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் சமுதாய நலக் கூடங்கள் கட்டி கொடுக்கப்பட்டன.
இந்த கட்டடங்கள் செப்பனிடாமலும், வா்ணம் பூசாமலும் தற்போது சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடங்களை சீரமைத்து, பழுது பாா்த்து, வா்ணம் பூசி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற நிா்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.