search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west bengal cm"

    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
    • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

    வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொழில் துறையை மேம்படுத்த மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு நடைபெற்றது
    • தான் பட்ட துன்பங்களை குறித்து மம்தா உரை ஆற்ற வேண்டும் என்றார் மிச்சி

    இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்து தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அங்கு உலக வர்த்தக சந்திப்பு நடைபெறுகிறது.

    நேற்று, மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பில் (Bengal Global Business Summit) மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஆக்ஸ்போர்டு துணைவேந்தரும் (pro-vice-chancellor) அறிவுசார் பரிமாற்ற துறையின் பேராசிரியருமான ஜொனாதன் மிச்சியை (Jonathan Michie) உரையாற்ற அழைத்தார்.

    அப்போது ஜொனாதன் மிச்சி தெரிவித்ததாவது:

    இனவெறிக்கு எதிராகவும் சமூக அமைதியை நிலைநாட்டவும் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் எங்களை நெகிழ செய்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம், எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்து தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களையும், போராட்டங்களையும், அதை தாண்டிய அவரது சாதனைகளையும் குறித்து உரையாற்ற அழைத்தோம். ஆக்ஸ்போர்டில் இந்தியர்கள் பலர் கல்வி பயில்வதால், மம்தாவின் உரை எங்கள் மாணவ மாணவியர்களாலும், பேராசிரியர்களாலும் மிகவும் விரும்பப்படும். எங்கள் அழைப்பை அவர் ஏற்று கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிச்சி கூறினார்.

    தென்மேற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பிராந்தியத்தில் உள்ளது ஆக்ஸ்போர்டு (Oxford) நகரம். உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இந்நகரத்தில் உள்ளது. தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம், 900 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளுக்காக 70 துறைகள் அங்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைவதற்கு ஆதரவு திரட்டிவரும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்தார். #ChandrasekharRao #Mamata #thirdfront #parliamentpolls
    கொல்கத்தா:
     
    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் களமிறங்கி உள்ளார்.
     
    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

    இந்நிலையில், நேற்று ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்து மூன்றாவது அணி தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரசேகர ராவ் இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    விரைவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். #ChandrasekharRao #Mamata #thirdfront #parliamentpolls
    தேசிய அரசியலை நோக்கி அடியெடுத்து வைக்கும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்க்கை வரலாறு தொடர்பாக இயற்றப்பட்ட புத்தகம் இன்று விற்பனைக்குவெளியானது. #MamataBanerjee #Mamatabiography
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை தொடர்பான வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவரது ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலுடன் பிரபல எழுத்தாளரான ஷுட்டப்பா பால் என்பவர் ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார்.

    ‘அக்கா: சொல்லப்படாத மம்தா பானர்ஜி’ (Didi: The Untold Mamata Banerjee) என்ற பெயரில் இன்று விற்பனைக்கு வெளியாகியுள்ள இந்த புத்தகத்தில் மம்தாவின் கல்லூரிக் கால வாழ்க்கை, அவரது அரசியல் பிரவேசம், அவர் முன்நின்று நடத்திய போராட்டங்கள், எதிர்க்கட்சிகளை எதிர்த்து வென்ற அவரது தனிப்பாணி, முதல் மந்திரியாக அவர் ஆற்றிய சாதனைகள் மற்றும் தற்போது தேசிய அரசியலின் பக்கம் திரும்பியுள்ள மம்தாவின் பார்வை மற்றும் 2019- பாராளுமன்ற தேர்தலில் அவர் ஆற்றவுள்ள பங்களிப்பு உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. #MamataBanerjee #Mamatabiography
    ×