search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Westindies"

    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சூஸ் பெட்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றுவருன் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #WIvSL

    போர்ட் ஆப் ஸ்பெயின்:
     
    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் இந்த தொடர் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமான தொடராக கருதப்படுகிறது.

    இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி பந்துவீசி வருகிறது.

    வெஸ்ட்இண்டீஸ் அணி: டெவான் ஸ்மித், க்ரேக் பிரத்வெய்ட், கெய்ரான் பவல், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் (விக்கெட்கீப்பர்), ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திர பிஷூ, கெமர் ரோச், மிகுவல் கம்மின்ஸ், ஷானோன் கேப்ரியல்

    இலங்கை அணி: குசால் பெரேரா, குசென் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், ரோஷன் சில்வா, நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட்கீப்பர்), தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹேராத், சுரங்கா லக்மல், லஹிரு கமகே, லஹிரு குமாரா. 

    தற்போது வரை வெஸ்ட்இண்டீஸ் அணி 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. ஹோப் 29 ரன்களுடனும், செஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #WIvSL
    ×