என் மலர்
நீங்கள் தேடியது "wife facility"
திருவாரூர்:
ரெயில் பயணிகளின் வசதிக்காக நாடு முழுவதும் முக்கிய ரெயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை நிலையங்களில் வைபை வசதி உள்ளது. இதேபோல் திருவாரூர் ரெயில் நிலையத்திலும் பயணிகளின் வசதிக்காக வைபை வசதி தொடங்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைபை வசதி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் அரைமணி நேரம் வரை மட்டுமே இந்த வசதி செயலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ரெயில் பயணிகள் கூறியதாவது:-
திருவாரூர் ரெயில் நிலையத்தில் வைபை வசதி வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. நடைமேடையில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. செல்போனுக்கு கடவுசொல் வரும். இதை பயன்படுத்தினால் இலவச வைபை வசதி கிடைக்கும்.
சுமார் அரைமணி நேரம் மட்டுமே செயலில் உள்ளது. ஆனால் ஒரு மணி நேரம் வரை வைபை வசதியை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை வசதி, ரெயிலை பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.