என் மலர்
நீங்கள் தேடியது "Wild leopards Party members"
- செல்வராஜ், குருசாமி, சதீஸ்குமார், கணகராஜ் ,முருகேசன், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவினாசி:
அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிதிநிறுவனத்தில் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி வாங்குவதாகவும், வாங்கிய கடனை திருப்பி கட்டிய பிறகும் மீண்டும் தொகை வசூலித்து சட்டவிரோதமாக செயல்படுவதாக கூறி நிதி நிறுவனத்தின் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலதுணை பொது செயலாளர் துரை வளவன், சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏபிஆர்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தம்பி முருகானந்தம், நாடாளுமன்ற ஒன்றியசெயலாளர்கள் ராசவளவன், வெங்கடாசலம் ,ரங்கசாமி, செந்தில்குமார், செல்வராஜ், குருசாமி, சதீஸ்குமார், கணகராஜ் ,முருகேசன், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவினாசி போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.