search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Will cut hands"

    பெண்கள் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன் என் உத்தர பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மந்திரியின் மகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #ArvindRajbhar #Ministerson
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான அரவிந்த் ராஜ்பர் சண்டவ்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்.

    ‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற குற்றவாளிகளை இல்லாமல் செய்துவிடுவோம்’ என்று அரவிந்த் பேசினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    கடுமையான சட்டம் வந்தால் ஒழிய, இந்த அழுக்கு மனப்பான்மை கொண்ட மக்கள் எப்போதும் நம்மைச் சுற்றி இருப்பார்கள் எனவும், அத்தகைய குற்றவாளிகளை தூக்கிலிடும் வகையில் கடுமையான சட்டம் வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பர் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. #ArvindRajbhar #Ministerson

    ×