என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvSA"

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் கேப்டன் ஹேலே மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் முறையே 10 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டஃபைன் டெய்லர் பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் இணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்தது.

    ஸ்டஃபைன் டெய்லர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய நொன்குலேகோ லாபா 4 விக்கெட்டுகளையும், மரிசேன் கப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீராங்கனைகளான கேப்டன் லாரா வொல்வூராட் மற்றும் டாஸ்மின் ப்ரிட்ஸ் முறையே 59 மற்றும் 57 ரன்களை அடித்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

    உலகக்கோப்பைக்கான இன்றைய இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் (Warm-Up) நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான் - வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    கார்டிஃபில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. மழையால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டோலில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தென்ஆப்பிரிக்கா 9.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.

    12.4 ஓவரில் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    ×