என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Women Asia Cup"
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- ஆசிய கோப்பை தொடரில் சமாரி அட்டப்பட்டு 304 ரன்கள் குவித்தார்.
கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் ஐசிசி தேர்வு செய்து அவர்களை அந்தந்த மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கும்.
அதன்படி ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, இங்கிலாந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
இலங்கையில் நடைபெற்ற பெண்களுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சமாரி அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் சமாரி அட்டப்பட்டு ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அட்கின்சன் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
சமாரி அட்டப்பட்டு பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் 304 ரன்கள் குவித்தார். சராசரி 101.33 ஆகும். மலேசியாவுக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முக்கியமான போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் விளாசினார்.
- 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாளம் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது.
- அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார்.
9-வது மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேபாளம், பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து அதிரடியாக விளையாட முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய நேபாளம் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக கபிதா ஜோஷி 31 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாடியா இக்பால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன குல் பெரோசாக் மற்றும் முனீபா அலி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த குல் பெரோசாக் இலக்கை நெருங்கிய தருவாயில் ஆட்டமிழந்தார். வெறும் 11.5 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்த பாகிஸ்தான் 110 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. முனீபா அலி 46 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நடப்பு தொடரில் பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்திருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்