search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women asian champions trophy"

    • சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
    • 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா தரப்பில் சங்கீதா குமாரி 2 கோல்களும், பிரீத்தி துபே மற்றும் உதிதா தலா ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற பங்காற்றினர்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவுடன் நாளை மோத உள்ளது.

    கொரியாவில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கியில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.
    தென்கொரியாவின் டோங்கோ நகரில் பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் நடைபெற்றது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா - தென்கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றன. இதில் தென்கொரியா 1-0 என இந்தியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    தென்கொரியா இதற்கு முன் 2010 மற்றும் 2011-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியா 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டுள்ளது.

    முதல் காதலிறுதி நேரத்தில் கொரியா தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்கொரியாவின் முடிவு ஆச்சர்யம் அளித்த நிலையிலும், இந்தியாவின் பின்கள வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி கொரியாவின் முயற்சிகளை தடுத்தனர். இதனால் முதல் காலிறுதி நேரமான 15 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது காலிறுதி நேரத்தில் இரண்டு நிமிடத்திற்குள் மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது கொரியா. ஆனால், இந்திய கோல்கீப்பரான சவிதா சிறப்பாக செயல்பட்டு, தென்கொரியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டார். ஆனால் 24-வது நிமிடத்தில் யங்சில் லீ கோல் அடித்தார். இதனால் 1-0 என கொரியா முன்னிலைப் பெற்றது.

    இந்திய வீராங்கனைகள் ஸ்கோரை சமநிலைப்படுத்த கடுமையாக முயற்சி செய்தார்கள். ஆனால், தென்கொரியாவின் தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியவில்லை. 43-வது நிமிடத்தில் கொரியா வீராங்கனை மி ஹியூங் பார்க் பின்கள வீராங்கனை ஏமாற்றி கோல் நோக்கி பந்து விளாசினார். ஆனால் சவிதா அருமையாக அதை தடுத்தார்.



    44-வது நிமிடத்தில் கொரியாவிற்கு நான்காவது பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. சவிதாவின் சிறப்பான ஆட்டத்தால் கொரியாவின் கோல் முயற்சி தோல்வியடைந்தது. கடைசி காலிறுதி நேரத்தில் இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலனளிக்கவில்லை.

    இதனால் இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தது. இந்திய முன்கள வீராங்கனை வந்தனா கட்டாரியா தொடரின் சிறந்த வீராங்கனை விருதையும், லால்ரெம்சியாமி அப்கம்மிங் வீராங்கனை விருதையும் தட்டிச் சென்றனர். நவ்னீத் கவுர், வந்தனா கட்டாரியா இந்த தொடர் அதிக கோல்கள் அடித்தனர்.
    ×