search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women T20 World Cup"

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி- நியூசிலாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே மோசமான சாதனையில் முதல் இடமாக உள்ளது.

    அதேசமயம் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

    • நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
    • மொத்தமாக இதுவரை 46 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஸ்கட் 3.2 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இதன்மூலம் அவர் டி20 உலகக் கோப்பையில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பெண்கள் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவின் ஷப்னின் இஸ்மாயில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் 41 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 40 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளன.

    மேகன் ஸ்கட் 26 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் படைத்தார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது.
    • அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    துபாய்:

    ஐ.சி.சி. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இங்கிலாந்து கோப்பையை வென்றது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    கடைசியாக கடந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 8 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தலா 1 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

    9-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வங்காளதேசத்தில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது. அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அங்குள்ள துபாய், ஷார்ஜாவில் போட்டி நடைபெறுகிறது.

    இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    இந்த நிலையில் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் அக்டோபர் 4-ந் தேதி மோதுகிறது. பாகிஸ்தானை அக்டோபர் 6-ந் தேதி சந்திக்கிறது. இலங்கையுடன் 9-ந் தேதியும், ஆஸ்திரேலியாவுடன் 13-ந் தேதியும் மோதுகிறது.

    20 ஓவர் உலக கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 15-ந் தேதியுடன் லீக் சுற்று முடிகிறது.

    17-ந் தேதி முதல் அரை இறுதி துபாயிலும், 18-ந் தேதி 2-வது அரை இறுதி ஷார்ஜாவிலும் நடக்கிறது. இறுதிப் போட்டி அக்டோபர் 20-ந் தேதி துபாயில் நடைபெறுகிறது. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மாற்று தினம் (ரிசர்வ் டே) ஒதுக்கப்பட்டுள்ளது.

    • நேற்று மாலை வரையிலும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
    • வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. கேப்டவுன் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் பந்து வீச்சாளரான பூஜா வஸ்த்ரகரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை என தெரியவந்துள்ளது.

    ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்த இருநாள்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் போட்டியில் பங்கேற்பது குறித்து அணி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    நேற்று மாலை வரையிலும் இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். வஸ்த்ரகர் விளையாடபோவதில்லை என உறுதியாக கூறப்பட்டாலும், ஹர்மன்ப்ரீத் பற்றி போட்டி தொடங்குவதற்கு முன்னரே தெரிய வரும்.

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தது.



    இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தானுக்கு, இந்திய பவுலர்கள் கடும் குடைச்சல் கொடுத்தனர். ஆயிஷா ஜாபர் (0), உமைமா சோகைல் (3 ரன்) இருவரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. அதன் பிறகு மிடில் வரிசையில் பிஸ்மா மாரூப் (53 ரன்), நிதா தர் (52 ரன்) இருவரும் அரைசதம் அடித்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட வைத்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சென்னையைச் சேர்ந்த ஹேமலதா மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



    அடுத்து களம் புகுந்த இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 56 ரன்களும் (47 பந்து, 7 பவுண்டரி), மந்தனா 26 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

    முன்னதாக கிராஸ் இஸ்லெட்டில் ஏ பிரிவில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையே நடக்க இருந்த லீக் ஆட்டம் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. #WomenT20 #WorldCup #India #Pakistan
    ×