என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's League"

    • ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
    • பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பாரதிய ஜனதா ஆட்சியை கண்டித்தும் சென்னை புறநகரில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 6 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றன.

    ஆலந்தூர் பல்லாவரம் தாம்பரம் செங்கல்பட்டு திருப்போரூர் குன்றத்தூர் ஆகிய இடங்களில் மகளிர் அணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.

    ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி நங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதேபோல் பல்லாவரம், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு ஊர்களிலும் திமுக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    • அ.தி.மு.க. மேற்கு மாநில அவைத்தலைவர் பேராசிரியர் ராமதாஸ், பெண்களின் ஆடை குறித்து கருத்துக்கள் வெளி யிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • அவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்காக ராமதாஸ் இந்தியப் பெண்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில செயலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. மேற்கு மாநில அவைத்தலைவர் பேராசிரியர் ராமதாஸ், பெண்களின் ஆடை குறித்து கருத்துக்கள் வெளி யிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்காக ராமதாஸ் இந்தியப் பெண்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் கருத்துகளுக்கு எதிராக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் போராட்டத்தில் ஈடுபடும்.

    புதுவைக்கு சுற்றுலா வரும் பெண்கள் ஆடை பற்றி கொச்சையான விமர்சனம் செய்திருப்பதற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×