என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's ODI rankings"

    • நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 சதம் உள்பட 248 ரன்கள் குவித்தார்.
    • இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு (758 புள்ளி) 'நம்பர் ஒன்' இடம் பிடித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 சதம் உள்பட 248 ரன்கள் குவித்து தொடர் நாயகி விருது பெற்றதன் மூலம் சமாரி அட்டப்பட்டு 6 இடங்கள் ஏற்றம் கண்டு முதல்முறையாக அரியணையில் ஏறியுள்ளார்.

    இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார். இதற்கு முன்பு ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இலங்கை வீரர்களில் ஜெயசூர்யா மட்டும் முதலிடம் (2002, 2003-ம் ஆண்டுகளில் 181 நாட்கள்) பிடித்து இருந்தார்.

    ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி (754 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (732 புள்ளி), இங்கிலாந்தின் நாட் சிவெர் (731), ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (717), இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (716), ஸ்மிர்தி மந்தனா (714) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து முறையே 2 முதல் 7 இடங்களை பெற்றுள்ளனர்.

    • பேட்டிங் தரவரிசையில் ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.
    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா (696 புள்ளி) 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் (639 புள்ளி) 10-வது இடத்தில் உள்ளார்.

    இதன் முதல் 3 இடங்கள் முறையே இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (807 புள்ளி), இலங்கையின் சமாரி அத்தபட்டு (736 புள்ளி), ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (717 புள்ளி) உள்ளனர்.

    ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (746 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் (677 புள்ளி) 2-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் (675 புள்ளி) 3ம் இடத்திலும் உள்ளனர்.

    இந்தியா தரப்பில் தீப்தி சர்மா (654 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தீப்தி சர்மாவை தவிர முதல் 10 இடங்களில் வேறு எந்த வீராங்கனையும் இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் மேரிசான் கேப் ( 452 புள்ளி) முதல் இடத்திலும், இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் (360 புள்ளி) 2-ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (358 புள்ளி) 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் அமெலியா கெர் (347 புள்ளி) 4-ம் இடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா (345 புள்ளி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.

    ×