search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's World Cup Cricket"

    • டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.

    9-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது.

    வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இன்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா 36 ரன்கள் அடித்தார். ஸ்காட்லாந்து அணி சார்பில் சஸ்கியா மெக் ஹார்லி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து ௧௬ ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஸ்காட்லாந்து அணி சார்பில் சாரா ஜெனிபர் பிரைஸ் 49 ரன்கள் எடுத்தார்.

    • இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
    • உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. போட்டிகள் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது.

    வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

    இன்று மாலை 3.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசம்-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.

    இந்திய அணி பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர். இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.

    சோபி டிவைன் தலை மையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர்,லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர்.

    இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.

    • இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது.
    • அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் நடந்த 8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

    கேப்டவுனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    அந்த அணி ஏற்கனவே 2010, 2012, 2014, 2018, 2020-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.

    கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.8.27 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.14.48 லட்சமும் வழங்கப்பட்டது.

    ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தோற்ற தென் ஆப்பிரிக்க அணி ரூ.4.13 கோடி பரிசு பெற்றது. அரை இறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
    • 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் ஆனார்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

    மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

    இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

    இந்நிலையில் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது டோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.


    டோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் ஆடினார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் வேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து இருவரும் ரன் அவுட் ஆன வீடியோவை ரசிகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வருகின்றனர். 

    • மனரீதியான நிலையில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்.
    • முதலில் பந்து வீசினால் 140 முதல் 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்.

    கேப்டவுன்:

    8-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. நேற்று முன் தினத்தோடு 'லீக்' ஆட்டங்கள் முடிந்தன.

    இதன் முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா (குரூப்1), இங்கிலாந்து, இந்தியா (குரூப்2) ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (குரூப்1), வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து, (குரூப்2) ஆகிய நாடுகள் 'லீக்' முடிவில் வெளியேறின.

    நேற்றைய ஓய்வுக்கு பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் கேப்டவுனில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி 2-வது முறையாக உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 2020 ஆண்டு நடந்த உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 85 ரன்னில் தோற்று இருந்தது. அதற்கு இன்று பதிலடி கொடுக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணியின் சவாலை எதிர் கொள்வது கடினமே. அந்த அணி இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. இந்திய அணி 3 போட்டி களில் வெற்றி (பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து) பெற்றது. இங்கிலாந்திடம் மட்டுமே தோற்றது.

    5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 7-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை எங்களால் தோற்கடிக்க முடியும் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மனரீதியான நிலையில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். எந்த அணி மனதளவில் வலிமையாக இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும். ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததுதான். ஆனால் எங்களால் அவர்களை தோற்கடிக்க முடியும்.

    ஆடுகளம் நன்றாக இருக்கிறது. பேட்டிங் நன்றாக அமைந்தால் 180 ரன் வரை இலக்கு நிர்ணயிப்போம். முதலில் பந்து வீசினால் 140 முதல் 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்.

    இவ்வாறு ரிச்சா கோஷ் கூறியுள்ளார்.

    ×