search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workers Union"

    • மேலே இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்
    • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 ஊதிய அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

    மக்களுக்கு வெறும் பக்கோடா குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்வா என மோடி அரசு செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்தியாவில் நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வைச் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை வெளிப்படுத்தியதை முன்னிறுத்தி இன்றைய தினம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

    இந்த ஊதிய ஏற்றத்தாழ்வு எக்கனாமிக்ஸ்க்கு பதில் பிரதமர் மோடியின் பக்கோடா நாமிக்ஸ் [pakoda-nomics] ஏற்படுத்திய  நேரடி விளைவு என்று அவர் விமர்சித்துள்ளார்.

    சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2024-2025 உலகளாவிய ஊதிய அறிக்கை, இந்தியாவில் வருமானம் ஈட்டுவோரில் முதன்மையாக இருக்கும் 10 சதவீதத்தினர் கீழ்மட்டத்தில் கடைசியாக இருக்கும் 10 சதவீதத்தினரை விட 6.8 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர் என்று கூறுகிறது.இது பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம் மற்றும் மியான்மர் உட்பட நமது அண்டை நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் விட இது மிகவும் சமமற்றது என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    அனைத்து குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளது என அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது.

     

    பெரும்பாலான தொழிலாளர்கள் சுயதொழில், வகைப்படுத்தப்படாத முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறைந்த ஊதியம் மற்றும் நிலையற்ற தன்மை நிலவுகிறது

    இது பயாலஜிகளாக பிறக்காத பிரதமர் உருவாக்கிய பக்கோடா-நாமிக்ஸின் நேரடி விளைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெகுஜனங்களுக்கு பக்கோடாக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு அல்வா! என ஜெய்ராம் ரமேஷ் தாக்கியுள்ளார்.

    நாட்டில் அதிகரித்து வரும் , வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் வருமான சமத்துவமின்மை ஆகியவற்றுக்குப் பொருளாதாரத்தை அரசு முறையற்று கையாள்வதே காரணம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

     

    • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
    • அரசாணை எண் 152 மற்றும் 139ஐ ரத்து செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறை மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் , தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக தொழிலாளர்களின் வேலை மற்றும் ஊதியத்தை பறிக்கும் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 152 மற்றும் 139ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

    பகுதிநேர ஊழியர்களை முழு நேர பணியாளர்களாக அறிவித்திட வேண்டும் , நிரந்தர தொழிலாளர்களை அவர்கள் பணிபுரியும் இடத்திலிருந்து வேறு வேலைக்கு மாற்றக்கூடாது, தூய்மை பணியாளர்களின் சர்வீஸ் பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். 

    • மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
    • சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சிவானந்தம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம், திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பாக திருப்பூர் பூங்கா நகரில் உள்ள சங்க அலுவலகமான சிவானந்தம் அரங்கில் உலக முடித்திருத்துவோர் தின விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சங்க பொருளாளர் என். எஸ். செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில சங்க முதன்மை துணைத் தலைவர் கந்தவேல் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் கே. வடிவேல் வரவேற்று பேசினார். மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி சங்க கொடியை ஏற்றி வைத்தார். சங்கத்தின் நிறுவனர் டாக்டர் சிவானந்தம் உருவப்படத்திற்கு அறக்கட்டளை தலைவர் மு. சக்திவேல், எம். சுப்பிரமணியம், மாநகர சங்க அமைப்புச் செயலாளர் எம். ராஜேந்திரன், மாநகர மாவட்ட சங்க துணைத் தலைவர்கள் வி. வெள்ளச்சாமி, வி. சண்முகம், எஸ். சுரேஷ்பாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் துணைச்செயலாளர்கள் ஆர். சூர்யா, பி. தீனா. கே. செந்தில்குமார் உட்பட அனைத்து கிளை நிர்வாகிகள், மற்றும் அனைத்து கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் துணை தலைவர் சபரீஸ்வரன் நன்றி கூறினார்.

    ×