search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world sleep day"

    • 20 சதவீதம் பேர் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக கூறி உள்ளார்கள்.
    • 9 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மருத்துவ பிரச்சனை இருப்பதாக கூறினார்கள்.

    ஓடி... ஆடி.... எவ்வளவுதான் உழைத்தாலும் ஒருநாளில் 8 மணி நேரமாவது நிம்மதியாக தூங்க வேண்டும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும், உற்சாகத்தையும் தரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால் எல்லோராலும் அப்படி தூங்க முடிகிறதா? ஒருவேளை தூங்கினாலும் இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறார்களா? என்பது பற்றி ஒரு சர்வே நடத்தி இருக்கிறார்கள்.

    மொத்தம் 40 ஆயிரம் பேரிடம் இந்த சர்வே நடந்திருக்கிறது. இதில் 61 சதவீதம் பேர் ஆண்கள். 39 சதவீதம் பேர் பெண்கள். அவர்களில் 39 சதவீதம் பேர் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் தூங்குவதாக தெரிவித்துள்ளார்கள். அதே நேரம் 39 சதவீதம் பேர் 4 முதல் 6 மணி நேரம் தூங்குவதாக கூறி இருக்கிறார்கள்.



    20 சதவீதம் பேர் 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக கூறி உள்ளார்கள். மொத்தம் 2 சதவீதம் பேர் மட்டுமே 8 முதல் 10 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதாக கூறி இருக்கிறார்கள். வருகிற 25-ந்தேதி உலக தூக்க தினம். இதையொட்டிதான் இந்த ஆய்வை நாடு முழுவதும் 348 மாவட்டங்களில் நடத்தி இருக்கிறார்கள்.

    அப்போது இந்த கொசுத் தொல்லையை தாங்க முடியவில்லையே என்று தினமும் கொசுக்களால் தூக்கத்தை தொலைப்பவர்கள் 22 சதவீதம் பேர்.

    நன்றாக அயர்ந்து தூங்கும் போது ஒன்றிரண்டு முறை கழிவறைக்கு செல்ல எழுந்து செல்வதால் தூக்கம் கெடுவதாக சிலர் ஆதங்கப்பட்டனர். மேலும் சிலர் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்கு செல்வதாகவும், பெண்களை பொறுத்தவரை வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டியிருப்பதால் இரவில் தாமதமாக தூங்க செல்வதாகவும், அதிகாலையிலேயே எழுந்து விடுவதாகவும் கூறினார்கள்.

    9 சதவீதம் பேர் தங்களுக்கு ஸ்லீப் அப்னியா என்ற மருத்துவ பிரச்சனை இருப்பதாக கூறினார்கள். மிக முக்கிய தகவல் தொடர்பு சாதனமாக இருக்கும் மொபைல் போன்கள் பலரது தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். மொபைல் போன்களில் வரும் தகவல்கள், நீண்ட நேரம் கண்விழித்து மொபைல் பார்ப்பது போன்றவைகள் நிம்மதியான தூக்கத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறினார்கள்.

    வாரத்தில் பல நாள் நீண்ட நேரம் தூங்க முடியாத ஏக்கத்தை போக்க விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதாகவும், சிலர் மதிய நேரங்களில் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த கணக்கெடுப்பின் மூலம் 59 சதவீதம் இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே இடையூறு இல்லாமல் நிம்மதியாக தூங்க முடிவதாக கூறினார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திய லோக்கல் சர்க்கிள் நிறுவனத்தின் தலைவர் சச்சின் தபாரியா கூறி இருக்கிறார். இது கவலைக்குரிய விசயமாகவே இருப்பதாக கூறினார்.

    இது குறைந்தபட்சம் மற்றும் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்தி விடுவதாகவும் அவர் எச்சரித்தார்.

    • 2008ம் ஆண்டிலிருந்து மார்ச் 17ம் தேதி உலக தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது.
    • ஊழியர்கள் மற்ற விடுமுறையைப் போலவே இந்த விடுமுறைக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.

    உலகளவில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று சர்வதேச தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது.

    போதுமான தூக்கத்தைப் பெறுவதன் மதிப்பு மற்றும் போதுமான தூக்கம் இல்லாததால் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை தெரிவிக்கும் வகையில், உலக தூக்க தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

    பெங்களூருவில் உள்ள வேக் ஃபிட் சொல்யூஷன்ஸ் என்கிற நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு உலக தூக்க தினத்தை முன்னிட்டு இன்று விருப்ப விடுமுறையாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வேக்ஃபிட் நிறுவனம் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் இன்ப அதிர்ச்சியை அளித்தது. இந்த இமெயிலில்" தனது அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 17ம் தேதி வெள்ளிக்கிழமை உலக தூக்க தினத்தை கடைபிடிக்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் தூக்க நாளை விடுமுறையாகக் அறிவிப்பதில் மகிழ்ச்சி. அதனால், ஊழியர்கள் மற்ற விடுமுறையைப் போலவே இந்த விடுமுறைக்கும் விண்ணப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தது.

    ×