என் மலர்
நீங்கள் தேடியது "Worms in ice cream"
- அதிகாரிகள் ஆய்வு
- குளிர்பானங்கள், உலர் பழங்கள் உள்ளிட்டவை சோதனை
ஆற்காடு:
ஆற்காடு 70 அடி சாலையில் குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இந்த கடைக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று ராணிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் நகர மன்ற உறுப்பினர் தனது மகளுடன் இந்த ஐஸ்கிரீம் கடைக்கு சென்று உலர் பழ வகை ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் முந்திரி தூள்களுடன் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் (பொறுப்பு) கந்தவேல், ஆற்காடு வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நகராட்சி அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு கடையில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், உலர் பழங்கள் உள்ளிட்ட வற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.