என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "worshiped"
- 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை.
- பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, வீரமாத்தியம்மனுக்கு பூஜை,முனீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக பூஜை,பொங்கல் சாட்டுதல், முனீஸ்வரர் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் கண் திறப்பு பூஜை, கன்னிமார் சுவாமி அம்மன் அழைப்பு ,படுகளம் மற்றும் உடுக்கை பாட்டு,சுவாமிக்கு பொங்கல் படைத்தல் ,உருவாரம் எடுத்து வருதல் ,சுவாமிக்கு அலங்காரம் மற்றும் உச்சி கால மகா பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் 150க்கும் மேற்பட்ட பன்றிகள்,100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்கள்,சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக பொங்கல் விழாவை முன்னிட்டு புதிய சிற்பிகள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் திண்டு பாலுவின் ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் கவிதா ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திண்டுபாலு, மோகனகண்ணன், ஜெயபாலன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிக்கண்ணன் வரவேற்றார்.இதில் கவுன்சிலர்கள் சசிரேகா ரமேஷ்குமார் ,தண்டபாணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.காவல் துறை,பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகள் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் பல்லடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு கொயிலாண்டியைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகியோர் கடந்த மாதம் 24-ம் தேதி அதிகாலை இருமுடி கட்டி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டனர். பம்பை போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்கள் அப்பாச்சிமேடு வரை தடங்கலின்றி நடந்து சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் நேற்று மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 3.45 மணிக்கு இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் இருவரும் கோவிலுக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. #SabarimalaProtest #SabarimalaWomen
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்