என் மலர்
நீங்கள் தேடியது "x"
- குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது
- எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஷ்புதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "X தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
- ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார்.
உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வழக்கம்.
எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே தனது மகள் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை எலான் மஸ்க் தவிர்த்து வருகிறார்.
இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவளுக்கு ₹21 கோடி கொடுத்தேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், "தெரியாமலேயே... நான் ஆஷ்லேக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன், மேலும் அவளுக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை கண்டித்து அவரின் டெஸ்லா நிறுவன கார்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.
- டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று எலான் மஸ்க் மாற்றினார்.
- X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
- இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம் குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் யோகிபாபு, அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் யோகிபாபு பேசியதாவது, "இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க" என்றார்.
- டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
- X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.
டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
"நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.
டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.
இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- முன்னதாக டுவிட்டர் நிறுவன லோகோ நீல பறவையில் இருந்து X ஆக மாற்றப்பட்டது.
உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- டுவிட்டர் வலைதளத்தில் கிரியேட்டர்கள் வருவாய் ஈட்டுவதற்கு புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
- உலகளவில் டுவிட்டர் வருவாய் பங்கீட்டு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
எலான் மஸ்கின் X, முன்பு டுவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த சமூக வலைதளத்தில் பயனர்கள் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் டுவிட்டர் அல்லது X புளூ சந்தா வைத்திருப்போருக்கு உலகளவில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவாய் ஈட்ட முடியும்.
அந்த வகையில், புதிய X தளத்தில் வருவாய் ஈட்டுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும். இதற்கு கிரியேட்டர்கள் மற்றும் பயனர்கள் வைத்திருக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
1 - பயனர்கள் X புளூ சந்தா வைத்திருப்பது அவசியம் ஆகும். இதோடு கடந்த 15 மாதங்களில், பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் இம்ப்ரஷன்கள் வந்திருப்பது அவசியம் ஆகும். குறைந்தபட்சமாக 500 ஃபாளோவர்கள் இருக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

2 - அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன சந்தா வைத்திருப்போருக்கு இந்த வழிமுறைகள் அனைத்தும் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. வருவாய் ஈட்டுவதற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்துவிட்டால், இந்த திட்டத்தில் இணைந்து கொண்டு, வருவாய் 50 டாலர்களை கடந்தபிறகு அவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
3 - எதன் அடிப்படையில் வருவாய் பங்கீடு வழங்கப்படுகிறது என்பது பற்றி X தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்போருக்கு ஜூலை 31-ம் தேதியிட்ட வாரத்தில் இருந்து வருவாய் வழங்கும் பணிகள் துவங்கப்படுகிறது.

4 - இந்த திட்டம் மிகவும் வெளிப்படையான ஒன்று என்றும், இதில் அனைத்து X புளூ மற்றும் வெரிபைடு நிறுவன வாடிக்கையாளர்கள் பங்கேற்று பயன்பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் மற்றும் கிரியேட்டர்கள் விளம்பர வருவாய் பங்கீடு மற்றும் கிரியேட்டர் சந்தா முறைகளை (Ads Revenue Sharing and Creator Subscriptions) செட்டப் செய்து கொள்ள வேண்டும்.
5 - புதிய வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் பணத்தை பெறுவதற்கு ஸ்டிரைப் அக்கவுன்ட் வைத்திருப்பதும் அவசியம் ஆகும். பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்க்க, இந்த திட்டத்திற்கான விதிகளை முழுமையாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.
- டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் உள்ளன.
- மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டுவிட்டர் தளத்தில் மாற்றங்கள் செய்வதை எலான் மஸ்க் தற்போதைக்கு நிறுத்த மாட்டார் என்றே தெரிகிறது. தற்போது X என்று மாறி இருக்கும் டுவிட்டர் சமூக வலைதளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இதில் புதிய மாற்றம் என்னவெனில், டார்க் மோடில் இருந்து தளத்தை டீஃபால்ட் மோடில் இயக்குவதற்கான வசதி வழங்கப்படாது என்பது தான்.
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதில் இருந்து தளத்தில் மேற்கொண்ட மிகப்பெரிய மாற்றத்தை தொடர்ந்து டார்க் மோட் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதிய அம்சம் பற்றிய தகவலை, டுவிட்டர் பயனர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது டுவிட்டர் தளத்தில் டீபால்ட், டிம் மற்றும் லைட்ஸ் அவுட் என மூன்றுவித டிஸ்ப்ளே ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் முதல் ஆப்ஷன், வழக்கமான வெள்ளை நிற பேக்கிரவுன்டை வழங்குகிறது. டிம் ஆப்ஷன் டுவிட்டர் தளத்தை சுற்றி இருள் சூழ்ந்ததை போன்று காட்சியளிக்கும் சாம்பல் நிறம் கொண்டிருக்கிறது. லைட்ஸ் அவுட் ஆப்ஷனில் திரை முழுக்க கருப்பு நிற பேக்கிரவுன்ட் வழங்கப்படுகிறது. புதிய மாற்றம் அமலுக்கு வரும் வரையில், இந்த மூன்று ஆப்ஷன்கள் தொடர்ந்து வழங்கப்படும்.
டுவிட்டர் தளத்தில் எழுத்துக்களின் அளவை மாற்றுவது, நிறத்தை மாற்றுவது போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி எழுத்துக்களை எல்லோ, பின்க், பர்பில், ஆரஞ்சு மற்றும் கிரீன் போன்ற நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டார்க் மோட் மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
- மஸ்க், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்
- எக்ஸ் நிறுவனம் முறையாக அனுமதி பெறவில்லை என நகர நிர்வாகம் கூறியது
இணையதளத்தில் 2006-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்ட பிரபலமான சமூகவலைதளம் டுவிட்டர்.
டுவிட்டரில் பயனர்கள் தங்களை இணைத்து கொண்டு தங்களுக்குள் தகவல்களை, எழுத்து, புகைப்படம், ஒலி மற்றும் வீடியோ வடிவில் பரிமாறி கொள்ளலாம். இதற்கு உலகெங்கும் பல நாட்டு அதிபர்கள் உட்பட பல கோடிக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.
கடந்த 2022 அக்டோபரில், உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதன் வருவாயை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டுவிட்டர் எனும் பெயரை எக்ஸ் என மாற்றினார்.
இதனை விளம்பரபடுத்தும் விதமாக பிரகாசமாக ஒளிரும் வகையில் மிகப்பெரிய "X" லோகோ, சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள அந்நிறுவன தலைமையக கட்டித்தின் மேல் நிறுவப்பட்டது.
ஆனால் இதை நிறுவ முறையாக அனுமதி பெறப்படவில்லை என நகர நிர்வாகம் இந்நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பியது.
மேலும், அந்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்களில் பலர் அதன் அதிக ஒளியால் கண்கூசுதல் உட்பட பல தொந்தரவுகள் இருப்பதாக புகாரளித்தனர். மேலும் அதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், மேல் தளத்தில் அது சரியாக நிலைநிறுத்தவில்லை என்றும் எந்நேரமும் அது கீழே விழும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் புகாரளித்தனர்.
இதுகுறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரிமாறி கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சான் பிரான்ஸிஸ்கோவின் கட்டிட தர பரிசோதனை மற்றும் நகர திட்டமிடலுக்கான நிர்வாகத்திற்கு சுமார் 24 புகார்கள் வந்தது.
இந்நிலையில் இப்பிரச்சனை பெரிதாவதற்குள் எக்ஸ் நிறுவன அதிகாரிகள் லோகோவை மேல்தளத்திலிருந்து தாங்களாகவே அப்புறப்படுத்தி விட்டனர்.
- லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார்.
- X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே இதனை டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார்.
X (முன்பு டுவிட்டர்) தளத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஏராளமான மாற்றங்களை தளத்தில் மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு செய்வதில் இருந்து தற்போதைக்கு எலான் மஸ்க் பிரேக் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.
அந்த வகையில், X தளத்தில் வீடியோ கால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டுவிட்டர் தளத்தில் மெசேஜிங் தவிர்த்து, ஹோம் ஃபீட் பிரிவில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தது. இதன் காரணமாக டுவிட்டர் தளத்தில் மிகவும் அரிதான நடவடிக்கையாக மெசேஜிங் வசதி வழங்கப்பட்டது. தற்போது, X தளத்தில் புதிதாக வீடியோ கால் பேசுவதற்கான வசதி வழங்கப்பட இருக்கிறது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் X தலைமை செயல் அதிகாரியான லின்டா யாக்கரினோ வீடியோ கால் வசதி பற்றிய தகவலை தெரிவித்தார். "நீண்ட வீடியோ மற்றும் செய்தி கட்டுரைகள் பிரபலமாக மாறி வரும் நிலையில், உங்களுக்கு பிடித்த கிரியேட்டர்களுக்கு சந்தாதாரர் ஆகிடுங்கள், அவர்கள் தற்போது இதில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றனர். நீங்கள் வீடியோவை பாருங்கள், விரைவில் உங்களது மொபைல் நம்பரை கொடுக்காமல், வீடியோ கால் மேற்கொள்ள முடியும்," என்று யாக்கரினோ தெரிவித்தார்.
இதே தகவலை X டிசைனர் ஆன்ட்ரியா கான்வே டுவிட் மூலம் உறுதிப்படுத்தினார். இதில் X யு.ஐ.-இல் வீடியோ காலிங் செய்வதற்கான படம் இடம்பெற்று இருக்கிறது. அதில் யு.ஐ. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் காலங்காலமாக இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. X தளத்தில் இடம்பெற்று இருக்கும் புதிய கால் ஐகானை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
தற்போது X தளத்தில் ஆடியோ காலிங் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வீடியோ கால் போன்றே ஆடியோ கால் வசதியும் முதல் முறையாக வழங்கப்பட இருக்கிறது. வீடியோ காலிங் யு.ஐ.-இல் மைக்ரோபோனில் மியூட்/அன்-மியூட், லவுட் ஸ்பீக்கர், டர்ன் ஆஃப் வீடியோ மற்றும் என்ட் தி கால் என நான்கு ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. புதிய அம்சம் பற்றி X சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை.
- திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தவர் மஸ்க்
- எலான் மஸ்க் சண்டையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என்றார் மார்க்
செய்தி, வீடியோ, ஒலி மற்றும் கோப்புகளை பிறருடன் பரிமாறி கொள்ளவும், பிறருடன் உரையாடவும் உலகின் முதன்மையான வலைதளமாக இருந்து வந்தது அமெரிக்காவை சேர்ந்த டுவிட்டர்.
இந்நிறுவனத்தை உலகின் நம்பர் 1 கோடீசுவரரான அமெரிக்கர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி அதன் லாபத்தை அதிகரிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பல பழைய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து புது அதிகாரிகளை சேர்த்த மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் பெயரை அண்மையில் 'எக்ஸ்' என மாற்றினார்.
உலகின் மற்றொரு பிரபல சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக திரெட்ஸ் எனும் சமூக உரையாடல்களுக்கான வலைதளம் ஒன்றை தொடங்கினார்.
இதை விரும்பாத எலான் மஸ்க், திரெட்ஸ் வலைதளத்தை வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, திரெட்ஸ் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்காப்பு கலை தெரிந்தவர் என்பதை அறிந்த எலான் மஸ்க் அவரை வம்பு சண்டைக்கு இழுத்தார். இதற்கு சளைக்காத மார்க் ஜூக்கர்பர்க், "சண்டைக்ககான இடத்தின் பெயரை அனுப்பவும்" என பதிலளித்திருந்தார்.
இவர்கள் இருவரும் இந்த சண்டை விசயமாக அவரவர் வலைதளங்களில் ஒருவரையொருவர் விமர்சித்து வந்தனர்.
மூன்று நாட்களுக்கு முன் மார்க் இது குறித்து கூறியதாவது:-
தற்காப்பு கலைக்கு முக்கியம் கொடுப்பவர்களோடு மட்டுமே போட்டியிட போகிறேன். எலான் இதை தீவிரமாக எடுத்து கொள்ளாதவர். எலான் மஸ்க் மாற்றி மாற்றி பேசுகிறார்.
இவ்வாறு மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து எலான் மஸ்க் தற்போது தெரிவித்திருப்பதாவது:-
நான் முதலில் விளையாட்டுக்காகத்தான் மார்க்கை சண்டைக்கு இழுத்தேன். பிறகு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என மார்க் கூறியதும், இத்தாலியை நான் தேர்ந்தெடுத்தேன். மார்க் மறுத்ததால், அவர் வீடுதான் சரியான இடமா? என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. எங்காவது சண்டையிட அவர் தயாரா? எனவும் தெரியவில்லை.
இவ்வாறு மஸ்க் தற்போது கூறியிருக்கிறார்.
இவர்கள் இருவருக்குமிடையிலான சொற்போர் இத்துடன் நிற்குமா அல்லது உண்மையிலேயே சண்டையிடுவார்களா என இணைய ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.