என் மலர்
நீங்கள் தேடியது "Yo Yo Test"
- யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல.
- நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலி கேப்டனாக வந்ததும் ஃபிட்டாக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் என்ற நிலையை உருவாக்கினார். அதை சோதிப்பதற்காக யோயோ டெஸ்ட் எனும் கடினமான சோதனை முறையும் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இப்போதெல்லாம் அந்த தேர்வில் தேர்ச்சியாகும் வீரர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒருவரின் பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்க்க வேண்டுமே தவிர யோயோ டெஸ்டில் எவ்வளவு மதிப்பெண் எடுக்கிறார் என்பதை பார்க்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஃபிட்னஸ் என்பது ஒரு காரணியாக இருக்க வேண்டும். அதே சமயம் சோதனையில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஃபிட்னஸ் என்பது உடற்பயிற்சியாளரை பொறுத்தது. அவர் நீங்கள் ஃபிட்டாக இருக்கிறார் என்று நினைத்தால் போதுமானது. ஏனெனில் சிலர் உடலளவில் ஒழுங்காக இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்குவார்கள்.
எனவே நீங்கள் யோயோ டெஸ்டில் தேர்ச்சியாகாதவரை தேர்வு செய்யாமல் போனால் அது சரியான வழியல்ல. நீங்கள் வீரர்களை அவர்களுடைய பேட்டிங், பவுலிங் திறமைகளை பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வீரர்களின் ஃபிட்னஸ் லெவலை சரியாக பார்த்துக் கொள்வது உடற்பயிற்சியாளரின் வேலை. எனவே யோ-யோ தேர்வில் தேர்ச்சியாகவில்லை என்ற காரணத்திற்காக ஒருவரை நீங்கள் தேர்வு செய்யாமல் போனால் அது நியாயமற்றதாகும்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
தனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவேன் என கவுதம் கம்பீர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
- யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் 36 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து வென்றுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்தியா ஆள் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் சர்பராஸ் கான் 150 ரன்களும் ரிஷப் பண்ட் 99 ரன்களும் குவித்தததால் 462 ரன்களை இந்திய அணி எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை இந்திய அணி தவிர்த்து.
சர்பராஸ் கான் உடல் பருமனாக இருக்கிறார் என்று கூறி அவருக்கு சில ஆண்டுகளாக வாய்ப்பு வழங்காமல் இருந்து வந்ததை குறிப்பிட்டு முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டாருக்கு எழுதிய கட்டுரையில், "உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய சதங்கள் அடித்தும் இந்திய அணியில் சர்பராஸ் கானுக்கு பல வருடங்களாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டுக்கு தேவையான மெலிதான இடுப்பு அவருக்கு இல்லை என்று அவர்கள் நம்பியதே இதற்கு காரணம். ஆனால் களத்தில் சர்பராஸ் பேட்டிங் அவருடைய இடுப்பை விட அபாரமாக இருந்தது.
துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட்டில் பல முடிவெடுக்கும் யோசனைகள் உள்ளன. அவற்றை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த ஃபிட்னஸ் தூய்மைவாதிகள் விரும்பும் மெல்லிய இடுப்பை கொண்டிருக்காத மற்றொரு வீரர் ரிஷப் பண்ட். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். இதற்கிடையே அவர் நாள் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
அதற்கு 6 மணி நேரம் உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டியது மட்டுமல்லாமல் பந்துகளை சேகரிக்க ஸ்டம்ப்புகளுக்கு ஓடுவதும் தேவைப்படுகிறது. எனவே தயவு செய்து இந்த யோயோ சோதனைகளை நிராகரித்து விட்டு ஒரு வீரர் மனதளவில் எவ்வளவு வலிமையானவர் என்பதை மதிப்பிடவும். ஒரு வீரர் நாள் முழுவதும் பேட் செய்யவோ அல்லது 20 ஓவர்கள் வீசவோ முடிந்தால் அவரது இடுப்பு எவ்வளவு மெலிதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் ஃபிட்டாக இருக்கிறார் என்பது அர்த்தம்" என்று எழுதியுள்ளார்.
இளம் வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால், 33 வயதிற்கு மேலான குக், ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திணறுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், அலஸ்டைர் குக் யோ-யோ டெஸ்டில் அசால்டாக பாஸ் ஆனார். அதேபோல் ஜேம்ஸ் ஆண்டர்சனும் தேர்ச்சி பெற்றார். இந்திய அணி வீரர்கள் 16.1 புள்ளி பெற்றாலே பாஸ். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் 19 புள்ளிகள் பெற வேண்டும்.
யோ-யோ டெஸ்டிற்கு முன் அலஸ்டைர் குக் 3 கி.மீட்டர் தூரம் ஓடியதாக தெரிகிறது.
அதேபோல் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான டெஸ்டிற்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி யோ-யோ டெஸ்ட் தோல்வியால் அணியில் இடம்பெறவில்லை.
இதனால் யோ-யோ டெஸ்ட் மீது முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பினார்கள். இந்நிலையில் வீரர்கள் தேர்விற்கு முன்பே யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘என்னைப் பொறுத்த வரையில் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஆனால், அணியில் தேர்வானபின், யோ-யோ டெஸ்டால் அவரது வாய்ப்பு பறிபோகியுள்ளது. அணி தேர்வுக்கு முன் யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நிலை எல்லோருக்கும் தர்மசங்கடமாக உள்ளது’’ என்றார்.
உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.
யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.

புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.
இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று முடிந்த நிலையில் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மாவிற்கு யோ-யோ டெஸ்ட் நடைபெறாமல் இருந்தது. இவருக்கு ஐபிஎல் தொடரின்போது இரண்டு முறை யோ-யோ டெஸ்ட் நடத்தப்பட்டது அப்போது தோல்வியடைந்தார்.

இதனால் தற்போது ரகனாவை மாற்று வீரராக தயார் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மூலம் இவர் அணியின் சக வீரர்களுடன் இங்கிலாந்து பறக்கினார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி வரும் 23-ந்தேதி இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது.


