என் மலர்
நீங்கள் தேடியது "Yoon Suk Yeol"
- யூன் சுக் இயோல் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
- பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த 3-ந்தேதி அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை வாபஸ் பெற்றார்.
பின்னர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் யூன் சுக் இயோல் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அவருக்கு எதிரான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. ஆனால் ஆளும் கட்சி புறக்கணித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதற்கிடையே புதிய தீர்மானத்தை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதா மீதான வாக்கெடுப்பை சனிக்கிழமை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று ஆளும் கட்சியே விரும்புகிறது.
இந்த நிலையில் அதிபர் யூன் சுக் இயோல் தொலைக் காட்சியில் பேசும்போது கூறியதாவது:-
நான் அறிவித்த ராணுவ அவசர நிலை ஆணை என்பது ஆளுகைச் செயலை சார்ந்தது.
இது விசாரணைகளுக்கு உட்பட்டது அல்ல. கிளர்ச்சிக்கு உட்பட்டது அல்ல. என் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். எனக்கு ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை. நாட்டின் அரசாங்கத்தை முடக்குவதற்கும், அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் காரணமான சக்திகள் மற்றும் குற்றக் குழுக்களை கொரியா குடியரசின் எதிர்காலத்தை அச்சுறுத்துவதைத் தடுக்க நான் இறுதிவரை போராடுவேன்.
எனது ராணுவ அவசர நிலை சட்டம் என்பது எதிர்க்கட்சியிடம் இருந்து ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூன் கூறும் போது, பதவி நீக்கத்துக்கு பதிலாக யூன் சுக் இயோல் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தற்போது ஜனநாயகத்தையும் குடியரசையும் பாதுகாக்க, பதவி நீக்கம் மூலம் அதிபரை வெளியேற்றுவது தான் ஒரே வழியாக உள்ளது என்றார். இதனால் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அதிபர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.
- அதிபர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கான கைது வாரண்டிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
கைது வாரண்ட் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான உத்தரவை சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் அதிபருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் கைது வாரண்ட் இது என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்து தென் கொரிய புலனாய்வாளர்கள் யூன் சுக் கைது செய்யப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.
- சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றார்.
- யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கினர்.
தென் கொரியா நாட்டில் பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் அவசர நிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை அதிபர் திரும்ப பெற்றார்.
இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வந்தனனர். மேலும், கடந்த வாரம் யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சியிலும் புலனாய்வு அதிகாரிகள் இறங்கினர்.
யூன் சுக் இயோல் கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதாரவாளர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். யூன் சுக் இயோல் எந்நேரத்திலும், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், புலனாய்வு அதிகாரிகளின் கைது முயற்சி வெற்றிபெறவில்லை. இது தொடர்பாக கடந்த வாரம் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
யூன் சுக் இயோலை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் தவறியதை அடுத்து, தென் கொரிய ஊழல் தடுப்பு துறையினர் காவல் துறை நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக தென் கொரிய ஊழல் தடுப்பு துறை மற்றும் காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
யூன் சுக் இயோலை கைது செய்வதற்கான வாரண்ட் காலாவதியாக உள்ளது. இதையடுத்து, யூன் சுக் இயோலை கைது செய்ய புதிய வாரண்ட் பிறப்பிக்க கோரி ஊழல் தடுப்பு துறையினர் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.