என் மலர்
நீங்கள் தேடியது "Young designer"
- 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
- மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்:
தமிழக அரசு மாநில அளவில் சிறந்த இளம் ஜவுளி வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்க உள்ளது. இதற்காக, மாவட்டம்தோறும், வடிவமைப்பாளர்களிடமிருந்து சேலைகளில் இடம்பெறும்வகையிலான புதுமையான மற்றும் அழகிய டிசைன்கள் பெறப்பட்டு வருகிறது.
கடந்த 6ந் தேதி டிசைன்களை அனுப்புவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. www.loomworld.in என்கிற தளத்தில், வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவு படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். திருப்பூர் பகுதி வடிவமைப்பாளர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 20ந் தேதிக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், 5வது தளத்தில் இயங்கும் கைத்தறி துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
இது குறித்து மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் வெற்றிவேல் கூறியதாவது:-
சிறந்த ஜவுளி டிசைனர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான டிசைனர்கள் உள்ளனர். ஆயினும் மாவட்டத்தில் இதுவரை 6 டிசைன்கள் மட்டுமே விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நிப்ட்-டீ கல்லூரி மாணவர் ஏராளமானோர், புதுமையான பின்னலாடை டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். அம்மாணவர்கள், விருதுக்கு தங்கள் டிசைன்களை சமர்ப்பிக்க ஆர்வம்காட்டவேண்டும். சிறந்த டிசைன்களை உருவாக்கி பின்னலாடை நகரான திருப்பூருக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.