என் மலர்
முகப்பு » Youth Road strike
நீங்கள் தேடியது "Youth Road strike"
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே 24 மணி நேர மது விற்பனையை கண்டித்து பெட்ரோல் கேனுடன் சாலை மறியலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கார்மேகம் என்ற வாலிபர் பழைய பஸ் நிலையம் அருகே கையில் பெட்ரோல் கேனுடன் சாலை மறியல் செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறோம்.
இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. மாறாக அவர்களும் மது விற்பனைக்கு உடந்தையாக இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார். சாலை மறியலால் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே பஸ்கள் வரமுடியாமல் நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட வாலிபர் கார்மேகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சமாதானம் அடையவில்லை. இதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். வாலிபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போது அங்கிருந்து பொதுமக்கள் வாலிபரை கைது செய்யக்கூடாது என்று கோஷம் எழுப்பினர். ஆனால் போலீசார் கைது செய்யப்பட்ட கார்மேகத்தை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த டாஸ்மாக் மதுக்கடையில் விடிய விடிய மது விற்பனை நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் மது விற்பனை நடைபெற வேண்டும்.
மது விற்பனைக்கு உடந்தையாக உள்ள அதிகாரி மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட வாலிபர் கார்மேகத்தை விடுதலை செய்யவேண்டும். இதே நிலை நீடித்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

×
X