என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "YSR congress party"
- மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
- கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.
திருப்பதி:
ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம்.
கண்ணியத்துடன் எழுந்து நிற்போம்.
மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத்திற்கும் வாக்குபதிவு .
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
திருப்பதி:
ஆந்திராவில் வருகிற 13-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் வாக்குபதிவு நடக்கிறது. தற்போது அங்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.
கோணசீமா மாவட்டத்தில் தபால் ஓட்டு வாங்கும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 கிராம் வெள்ளி காசு வழங்கினர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்படும் வெள்ளி காசுகளை சில அதிகாரிகள், ஆசிரியர்கள் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் தேர்தல் விதியை மீறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
- முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
- என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.
திருப்பதி:
ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.
திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.
"முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.
மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.
சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை ரோஜா கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாக். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சந்திரபாபு நாயுடு, மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகிறார். இது உயிரிழந்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல்.
கோதாவரி புஷ்கரத்தின் போது சந்திரபாபு நாயுடு தனது விளம்பரத்திற்காக நடத்திய படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானார்கள். அப்போது சந்திரபாபு நாயுடு ஏன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீது எதற்காக வழக்கு பதிவு செய்யவில்லை.
கொண்டவீடு பகுதியில் சந்திரபாபு நாயுடு வந்து செல்வதற்காக அதிகாரிகள் ஹெலிபேட் அமைத்தனர். என்னுடைய நிலத்தில் யாரை கேட்டு ஹெலிபேட் அமைத்தீர்கள் என்று கேட்ட விவசாயி கோட்டீஸ்வரராவை போலீசார் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என பேசி வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டுவதற்காக அமராவதி ஜகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு ஆசீர்வதிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்