என் மலர்
நீங்கள் தேடியது "Yugadhi"
- புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
- தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
- மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, அவிநாசி, கொடுமுடி, கோவை வெள்ளியங்கிரி மலை, உள்பட பல்வேறு புனித தலங்களிலிருந்து தீர்த்த கலசங்கள் முத்தரித்து கொண்டு வந்து மாகாளிய ம்மன், மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்வது கடந்த பலநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வருடமும் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் பல்லடம் மங்கலம் ரோடு ஆனந்த விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டு, பின்னர் மேளதாளத்துடன் ஊர்வ லமாக பச்சாபாளையம் மாகாளி அம்மன் கோவிலுக்கு, கொண்டு வரப்பட்டது.
பின்னர் தீர்த்த கலசங்களில் இருந்த தீர்த்தநீர் மாகாளியம்மன், மாரியம்மன் சாமிகளுக்கு ஊற்றி தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாகாளி யம்மன், மாரியம்மனை வழிபட்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.