என் மலர்
நீங்கள் தேடியது "Zebra"
- இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜீப்ரா".
- பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜீப்ரா". ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற "செம்பருத்தி" சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர்.
இவர்களுடன், பிரபல நடிகர்களான பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
சலார் மற்றும் கேஜிஎஃப் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது அதிரடியான பின்னணி இசை, இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக்குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
- விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
சீனாவில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தற்போது அங்கு ஷான்டான் மாகாணத்தில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல தோற்றமளிக்கும் வகையில் மாற்றி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் இவ்வாறு கழுதைகள் மீது ஓவியங்கள் வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடும் பனிப்பொழிவு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் இவ்வாறு வர்ணம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.
புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். சில பயனர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பதிவிட்டனர்.