search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zelenskiy"

    • என்னுடைய திட்டத்தை அமெரிக்க அதிபரில் தெளிவாக எடுத்துரைப்பேன்.
    • ரஷியாவின் மையப்பகுதியை தாக்கி, பேச்சுவார்த்தைக்கு தள்ளப்படும் நிலை உருவாக்க வேண்டும்- ஜெலன்ஸ்கி.

    ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை இரு நாடுகளுக்கு இடையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

    இந்த நிலையில்தான் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் மூன்று வாரங்களுக்கு முன் நுழைந்தது. அப்பிராந்தியத்தில் உள்ள ஏராளமான குடியிருப்பு பகுதிகளை தங்கள் வசப்படுத்திய உக்ரைன ராணுவம், ரஷியாவின் ராணுவ வீரர்களையும் பிடித்து வைத்துள்ளனர்.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி "தன்னுடைய திட்டத்தை (திட்டத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை) அமெரிக்க அதிபர் முன் எடுத்து வைப்பேன். மேலும் அவரை தொடர்ந்து விரைவில் அதிபராக இருப்பவர்களிடமும் எனது திட்டத்தை கூறுவேன் எனத் தெரிவித்திருந்தார்.

    மேலும் "ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியது என்னுடைய திட்டத்தின் ஒரு பகுதி. இது பொருளாதாரம் மற்றும் டிப்ளோமேடிக் ஆகியவற்றை உள்ளடக்கியாகும்.

    அமெரிக்கா வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி ரஷியாவின் உள்பகுதிகளை (ரஷியாவின் மையப்பகுதி) தாக்க அமெரிக்காவிடம் அனுமதி கேட்பேன். இதன் மூலம் ரஷியாவை போர் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு தள்ள முடியும். இதுதான் என்னுடைய யோசனை" என ஜெலன்ஸ்சி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஜெலன்ஸ்கி திட்டம் குறித்த கேள்விக்கு ரஷியா அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதில் அளிக்கையில் "எங்களுடைய இலக்கை அடையும் வரை எங்களுடைய சிறப்பு ராணுவ நடவடிக்கை என அழைக்கப்படும் உக்ரைன் மீதான சண்டை தொடர்ந்து நடைபெறும். உக்ரைனின் பிரதிநிதிகளிடமிருந்து இதுபோன்ற அறிக்கைகளைக் கேட்பது இது முதல் முறை அல்ல. இந்த கீவ் ஆட்சியின் தன்மையை நாங்கள் அறிவோம்" என்றார்.

    தற்போது உக்ரைன படைகளை குர்ஸ்க் பிராந்தியத்தில் வெளியேற்றுவது ரஷியாவின் முதன்மையாக நோக்கமாகும். உக்ரைன் ஊடுருவலை தொடர்ந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.

    • சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்.
    • அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம்- ஜெலன்ஸ்கி.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் போர் தொடுத்தது. இன்னும் தாக்குதல் நடைபெற்றுதான் வருகிறது. ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை பெரிதும் நம்பியுள்ளது.

    அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    அதேவேளையில் வடகொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ரஷியாவுக்கு உதவி செய்து வரும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடைவிதித்து வருகிறது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ முயற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், அமைதிக்கான மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறது. இதில் பெரும்பாலான நாடுகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோன் மூலம் பேசியதாகவும், அப்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷியாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவித்தார்" என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    மேலும், "அவர் மரியாதைக்குரிய நபரா? இல்லையா? என்று பார்ப்போம். ஏனென்றால், அவர் எனக்கு வார்த்தை கொடுத்துள்ளார்" என்றார்.

    இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில் "ரஷியாவிற்கு சீனா ஆயுதங்கள் விற்பனை செய்யவில்லை என்கிறது. ஆனால், ஆயுதங்கள் தயாரிப்பதற்கான திறன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இவைகள் ரஷியாவிற்கு உதவுகின்றன.

    உக்ரைனுக்கும் சீனாவுக்கும் இடையில் அமைதி தொடர்பான ஒரே பார்வை இருந்தால், இரு நாட்டிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். சீனாவுக்கு வேறு பார்வை இருந்தால், அமைதிக்கான மாற்று தயார் செய்யும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.

    இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×