என் மலர்
நீங்கள் தேடியது "ZOHO"
- கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது.
- ஜோஹோ சிஇஒ மீது அவரது மனைவி பிரமிளா விடுத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி பிரமிளாவிற்கும் விவாகரத்து ஆனது.
இந்நிலையில், ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம் குறைபாடு உடைய மகனையும், தன்னையும் 2020ம் ஆண்டு நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றச்சாட்டி உள்ளார்.
மேலும், கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும், விவாகரத்துக்கு பிறகு தனக்கு சொத்தில் சரிபாதியை ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்க்வே ஸ்ரீதர் வேம்பு இவ்வாறு செய்ததாக பிரமிளா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா திரும்பிய பிறகு ஸ்ரீதர் வேம்பு ஒரு முறை கூட என்னையும், மகனையும் பார்க்க வரவில்லை என்றும் அவர் கூறினார்.கலிபோர்னியாவில் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. ஆனால், வேம்பு அவரது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றி, மனைவி பிரமிளாவையும் அவரது மகனையும் நிர்கதியாக விட்டுச் சென்றுவிட்டதாக பிரமிளா சார்பில் வழக்கறிஞர்கள் வாதாடியுள்ளனர்.
ஜோஹோ சிஇஒ மீது அவரது மனைவி பிரமிளா விடுத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.
- எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போதுள்ள நிலைமையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிடும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தற்போதைய போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது, எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும், இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக மத்திய கிழக்கில் எது நடந்தாலும், அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மூன்றாவது அன்னிய செலாவனியும் பாதிக்கப்படும்.
"மின்திறனை பொருத்தவரையில், நமக்கு புதுப்பிக்கத் தக்க மின்திறன் மட்டுமே தேவை. இதற்கான உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டும். நம்மிடம் அதிகளவில் திறமைமிக்கவர்கள் உள்ளனர். நமக்கு தேவையான ஒன்று திறமைமிக்கவர்களை சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது மட்டும் தான். நமது தனியார் துறைகளில் இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று," என்று அவர் தெரிவித்து உள்ளார்.
"நமது மொத்த வருவாயில் பத்து சதவீதத்தை இந்தியா வழங்குகிறது, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது இருமடங்கு அதிகரித்து, முன்னணி சந்தையாக மாறும். நமக்கு மெக்சிக்கோ மிகச்சிறப்பான சந்தையாக உள்ளது. மத்திய கிழக்கில் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். தற்போது இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதை கணிக்கவே முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது .
- மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. மென்பொருள் தொழில் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] உள்ளிட்டவற்றின் வருகையால் மாற்றம் கண்டுவரும் நிலையில் ஜோஹோ நிறுவனத்திலும் இந்த மாற்றம் நிகழ்கிறது.

தொடர்ந்து ஜோஹோ இணை நிறுவனரான ஷைலேஷ் குமார் புதிய சிஇஓ ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மற்றொரு இணை நிறுவனரான டோனி தாமஸ், ஜோஹோ US பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார்.
ராஜேஷ் கணேசன் ManageEngine பிரிவையும், மணி வேம்பு Zoho.com பிரிவையும் தொடர்ந்து வழிநடத்துவார்கள் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது.
- அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.
தமிழகத்தின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஜோஹோ (ZOHO) இன் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து சமீபத்தில் ஸ்ரீதர் வேம்பு விலகினார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்ரேஷன் உலகில் 50-க்கும் அதிகமான நாடுகளில் மென்பொருள் சேவை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியுள்ள ஸ்ரீதர் வேம்பு, Chief Scientist என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதற்கிடையே, ஸ்ரீதர் வேம்பு அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நான் அரசியலில் சேருவது பற்றி ஒரு "செய்தி" பரவி வருவதாகக் கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது!
அடுத்த வாரம் ஆஸ்டினில் உள்ள தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை வழங்க நான் கடுமையாகத் தயாராகி வருகிறேன். ஆம், நான் அங்கு செல்வேன்.
ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான புதிய பணி உள்ளது. மேலும் அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமும் எனக்கில்லை.
நான் அரசியலில் சேருவது பற்றி யாருடனும் இதுவரை பேசியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.