search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zomato food delivery"

    • கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • பல வட இந்திய மாநிலங்களில் அசைவ உணவு டெலிவரி நிறுத்தப்பட்டது

    தங்களுடன் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உணவகங்களில் இருந்து, அவர்களுக்கு விருப்பமான உணவை, அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்கும் சேவையை அளிப்பது இணையதள வழியாக இயங்கும் இந்திய நிறுவனம், சொமேட்டோ (Zomato).

    நேற்று, உத்தர பிரதேச மாநில அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    வட இந்தியாவின் பல மாநிலங்களில் நேற்று, வாடிக்கையாளர்களுக்கு சொமேட்டோவில் அசைவ உணவு வழங்கப்படவில்லை.


    இது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.

    "உத்தர பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசாங்க உத்தரவிற்கு ஏற்ப அசைவ உணவு வழங்குதல் நிறுத்தப்பட்டுள்ளது" என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் அறிவித்தது.

    ஜனவரி 22 அன்று, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள் சைவ உணவை மட்டுமே வழங்க முடிவெடுத்துள்ளதாக தேசிய உணவக சங்கத்தின் உத்தர பிரதேச தலைவரான வருண் கேரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


    அம்மாநிலத்தில் அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

    ×