search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zomoto"

    • விலைகள் உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது.
    • இந்த பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உணவுகளை ஆன்லைன் செயலிகள் மூலம் ஆர்டர் செய்து இருக்கும் இடத்திற்கு வரவழைத்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்பவர்கள் உணவுகளின் விலையை கண்டுகொள்வதில்லை.

    ஆனால் ஓட்டல்களில் உணவு வகைகளுக்கு இருக்கும் விலையை விட ஆன்லைன் செயலிகள் மூலம் அந்த உணவு வகைகளை ஆர்டர் செய்யும் போது அவற்றின் விலை சுமார் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது.

    இதுதொடர்பாக அபிஷேக் கோத்தாரி என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், சொமோட்டோ மூலம் உப்புமா ஆர்டர் செய்த போது அதன் விலை ரூ.120 என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று மெனுவில் உள்ள உப்புமா விலையை பார்த்த போது ரூ.40 ஆக இருந்தது.

    இதேபோல ஓட்டலில் தட்டு இட்லி விலை ரூ.60 என இருந்தது. ஆனால் ஆன்லைன் செயலியில் தட்டு இட்லி விலை ரூ.160 என காட்டியது. இதைப்பற்றிய பில்லுடன் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், அவரது பதிவு வைரலானது.

    இதையடுத்து சொமோட்டோ நிறுவனம், அபிஷேக்கிற்கு அளித்த பதிலில், `எங்கள் செயலியில் உள்ள விலைகள் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். அதே நேரம் பயனர்கள் பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அவரது பதிவு வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×