என் மலர்
நீங்கள் தேடியது "அரசியல்வாதி"
- அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
- பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
A politician is surrounded by journalists while walking down a corridor when one of them asks him a question.■ Instead of answering it, he raises his hand and slaps her in the head several times before climbing into his vehicle and driving away.■ Videos of this interaction in… pic.twitter.com/WjYw7CZtWa
— Stephen Mutoro (@smutoro) August 21, 2024
- 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.
- பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும்.
தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு செயலர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து நேர்மையான அதிகாரி என்று அனைத்து தரப்பிலும் மதிக்கப்படுபவர்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது தன்னை தலித் என்று இழிவு படுத்தினார் என்று இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மணீஷ் குற்றம் சாட்டி இருக்கிறார். மணீஷ் தற்போது ஈரோடு கூடுதல் கலெக்டராக பணியாற்றுகிறார். சென்னை மாநகராட்சியில் நடந்ததாக ஈரோட்டுக்கு சென்ற பிறகு மணீஷ் புகார் கூறி இருப்பது ஏன் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.
பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ரவிக்குமார் எம்.பி. பேடியின் நேர்மையை பாராட்டி இருக்கிறார். அவர் கடலூரில் கலெக்டராக இருக்கும் போதே அவரை நான் அறிவேன். மிகவும் நேர்மையான அதிகாரி. சாதி, மதம் எல்லாம் பார்க்க மாட்டார். நல்ல நிர்வாகி. அவர் மீது இவ்வாறு புகார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஏது என்று விசாரிக்காமலேயே குரல் கொடுத்து வரும் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகாரியின் நேர்மைக்கு துணை நிற்பது பாராட்டுக்குரியது. இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி.
- இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
- தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க நடவடிக்கை.
பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசு கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், ராணுவம் உடந்தையாக இருந்தது என்றும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சிக்கு எதிராக செயல்பட பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இம்ரான்கான் கூறும்போது, "எனது வேட்பாளர்களுக்கு தெரியாத எண்களில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
இடைத்தேர்தலை முன்னிட்டு எனது கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றார்.
இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.