என் மலர்
நீங்கள் தேடியது "அர்ச்சனா"
- இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார்.
2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை, 'வேல்ஸ் இண்டர்நேசனல்' நிறுவனம் தயாரித்தது.
"கோமாளி"யை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இது பிரதீப் ரங்கனாதனுக்கு ஹிட் படமாக அமைந்தது.
அடுத்தடுத்து கொடுத்த வெற்றி படங்களின் மூலம், பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் உயர்ந்தது.
அடுத்ததாக, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு வீடியோவை ஏ.ஜி.எஸ் நிறுவனம் கடந்த மாதம் யூ டியூபில் வெளியிட்டது.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து அவர்கள் கல்லூரி நாட்களில் நடந்ததை மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடபட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர். படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவரது எக்ஸ் தளத்தில் " ஃபைரா டைட்டில் கேட்டா ஃபைர் ஓடவே டைட்டில் கொடுக்குறீங்களே" என்று பெருமையுடன் வழங்குகிறேன் என்று பதிவை பதிவிட்டுள்ளார். படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் துவங்கப்படுகிறது. எம்மாதிரியான படமாக் இருக்குமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவு பெற்றது.
- இதன் டைட்டிலை நடிகை அர்ச்சனா வென்றார்.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இரண்டு வீடுகளுடன் புதுமையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி யாரு டைட்டில் வின்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த சீசனில் யாரும் எதிர்பாராத விதமாக வைல்ட் கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் வந்த அர்ச்சனா பல கோடி மக்களின் ஆதரவுடன் டைட்டில் வின்னராகினார். மேலும், இரண்டாவது இடத்தை மணி மற்றும் மூன்றாவது இடத்தை மாயா பிடித்தார்கள்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் குழுவிற்கு விருது கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
- சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
- தற்போது வைரமுத்துவை சந்தித்த பிரபல நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
- தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
- ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.
அகமதாபாத்:
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கப்பதக்கம் பெற்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 23.06 வினாடியில் கடந்தார்.
இதில் பங்கேற்ற மற்ற தமிழக வீராங்கனைகளான சந்திரலேகா 5-வது இடத்தையும், கிரிதரணி 8-வது இடத்தையும் பிடித்தனர்.
இதே போல 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை வித்யாவும் தங்கம் வென்றதோடு புதிய சாதனை படைத்தார். அவர் பந்தய தூரத்தை 56.57 வினாடியில் கடந்தார். மற்ற தமிழக வீராங்கனைகளான திவ்யா 5-வது இடத்தையும், சுமித்ரா 6-வது இடத்தையும் பிடித்தனர்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சுரேந்தர் ஜெயக்குமார் வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் சதீஷ் வெண்கல பதக்கம் பெற்றார்.
தேசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் தமிழக தடகள வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தடகளத்தில் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 18 பதக்கம் கிடைத்துள்ளது.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கம் கிடைத்தது. மனிஷ் சுரேஷ் குமார், சாய் சமிதா ஜோடிக்கு பதக்கம் கிடைத்தது.
நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் தொடரில் பவன் குமார் இந்த பதக்கத்தை பெற்றார். ஸ்குவாஷ் பந்தயத்தில் ஹரீந்தர் பால்சிங் சிந்து வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்தார்.
நேற்றைய போட்டி முடிவில் தமிழக அணிக்கு 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 46 பதக்கம் கிடைத்தது. பதக்க பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது.