என் மலர்
முகப்பு » இரும்புத்திரை
நீங்கள் தேடியது "இரும்புத்திரை"
சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்ற நடிகை சமந்தா, ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டி இருக்கிறார். #Samantha
நடிகை சமந்தா சினிமாவில் நடித்துக்கொண்டு பிரதியுஷா என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து சமூக சேவை பணிகள் செய்கிறார். ஆந்திராவில் இதய நோயால் பாதித்த குழந்தைகளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சைக்கு உதவினார். பள்ளிகளிலும் துப்புரவு பணிகள் செய்து மாணவ - மாணவிகளுக்கு உதவிகள் செய்கிறார்.
இப்போது விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை பட விழாவில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்று ஏழைகளுக்கு உதவுவதற்காக காய்கறி விற்று நிதி திரட்டினார். மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் உட்கார்ந்து காய்கறிகளை அவர் விற்றார்.
சமந்தா கையால் காய்கறி வாங்க பெரிய கூட்டம் கூடியது. ரசிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டார்கள். அவர்கள் அதிக பணம் கொடுத்து சமந்தாவிடம் இருந்து போட்டி போட்டு காய்கறிகளை வாங்கினார்கள். சிறிது நேரத்திலேயே கடையில் இருந்த அத்தனை காய்கறிகளும் விற்று தீர்ந்தன. இதில் வசூலான தொகை முழுவதையும் நலிந்த மக்களுக்கு சமந்தா வழங்குகிறார்.
நடிகர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர் மன்றங்களை அனைத்தையும் மக்கள் நல இயக்கமாக மாற்றி இருக்கிறார். #Vishal #HappyBirthdayVishal
விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மித்ரன் இயக்கத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக 100 வது நாளை கடந்து இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார்.
விஷாலின் பிறந்தநாளான இன்று, பிறந்தநாள் விழா, இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழாவையும் சேர்த்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடினார். இதில் விஷால், இயக்குனர் மித்ரன், நடிகை சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ‘மக்கள் நல இயக்கம்’ ஆக மாற்றி இருக்கிறார். இவ்விழாவில் இதற்கான கொடியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் விவேகம், வித்தியாசம், விடா முயற்சி எனவும், அணி சேர்வோம் அன்பை விதைப்போம் என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான `இரும்புத்திரை' படத்தின் தெலுங்கு பதிப்பான `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படக்குழுவை பாராட்டியுள்ளார். #Irumbuthirai Vishal
சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் `இரும்புத்திரை' படத்திற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்து.
அதேபோல `அபிமன்யுடு' என்ற பெயரில் தெலுங்கில் இந்த படம் வெளியானது. தெலுங்கு ரசிகர்களிடையேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட `அபிமன்யுடு' படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தெலுங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், `அபிமன்யுடு' படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகஷே் பாபு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இதுகுறித்து மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`அபிமன்யுடு படத்தை பார்த்து வியந்தேன். பி.எஸ்.மித்ரன் தனது நோக்கத்தை திரையில் அறிவுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். விஷால் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்' இவ்வாறு கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். #Irumbuthirai Vishal
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தின் தெலுங்கு பதிப்பான அபிமன்யடு படத்தின் வசூல் ரூ.10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Irumbuthirai Vishal
சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, விஜய் ஆண்டனி ஆகியோரது படங்கள் இரண்டு மொழிகளையும் குறி வைத்தே எடுக்கப்படுகின்றன. கடந்த மாதம் வெளியான விஷாலின் இரும்புத்திரை தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
படத்தில் அர்ஜுன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருந்தார்கள். அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இரும்புத்திரை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் கடந்த வாரம் வெளியானது.
இந்த படம் தெலுங்கில் நேரடியாக வெளியான படங்களைவிட வசூலில் முந்தி இதுவரை 12 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அபிமன்யுடு வெளியான திரையரங்குகளில் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருப்பதால் படம் அங்கும் பிளாக்பஸ்டர் வெற்றி அடையும் என நம்புகிறார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக இதுவரை 60 கோடியை வசூலித்துள்ளது இரும்புத்திரை. #Irumbuthirai Vishal
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு மித்ரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். #PSMithran #Irumbuthiurai
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள அர்ஜுனின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் குறித்து சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகின. பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக கார்த்தியுடன் இணையவிருப்பதாகவும், அந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
முன்னதாக, மித்ரன் உதயநிதியுடன் இணையவிருப்பதாக தகவலட வெளியாகி இருந்தது. இவ்வாறு அடுத்தடுத்து தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மித்ரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், இரும்புத்திரை படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக எனது அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருக்கிறார். #PSMithran #Irumbuthiurai
‘இரும்புத்திரை’ வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷால், நான் திருமணம் செய்ய இருக்கும் பெண்ணை தினமும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது. படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான விஷால் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது, ‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன்.
மெர்சல் அளவுக்கு இந்த படத்துக்கு பிரச்னை யாரும் பண்ணவில்லையே என்றால் அதற்கு காரணம் நாங்கள் உண்மையை தான் சொல்லி இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று பொருள்’ என்று பதிலளித்தார். விஷால் அடுத்து அரசியலுக்கு வரும் திட்டத்தில் இருக்கிறார்.
அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார். மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தை வெளிவராமல் இருப்பதற்கு நிறைய பேர் தடுத்தார்கள் என்று நடிகர் விஷால் வெற்றி விழாவில் பேசினார். #Vishal
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால், அர்ஜுன், இயக்குனர் மித்ரன், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் விஷால் பேசும்போது, ‘இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும், தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.
ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது.
படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.
இரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா, என்னைப் பற்றி வந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார். #Samantha
ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றதில் உற்சாகமாக இருக்கிறார் சமந்தா. அந்த உற்சாகத்தில் அவர் அளித்த பேட்டி...
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறீர்களே?
இல்லை. யுடர்ன் படத்தை நான் தயாரிப்பதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அந்த படத்தை வேறு ஒருவர் தயாரிக்கிறார். அதில் பத்திரிகையாளராக வருகிறேன். வித்தியாசமான கதாபாத்திரம்.
பெரிய குடும்பத்தில் மருமகளாகி இருக்கிறேன். மிகவும் கவனமாக இருக்கிறேன். மாமனாரை பார்த்து பயந்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக இருக்கிறார். ஏதாவது பிரச்சினை என்றால் ‘அட விடும்மா’ என்று உற்சாகப்படுத்துகிறார். சினிமா குடும்பம் என்பதால் என்னை புரிந்துகொள்கிறார்கள்.
திருமணத்துக்கு பின் அதிகமாக கவர்ச்சி படங்கள் வெளியிடுகிறீர்களே?
என் சமூக வலைதளங்களில் எந்த படங்களை வெளியிட வேண்டும் என்பது என் உரிமை. அதில் தலையிட, அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. எனக்கு என் எல்லை தெரியும்.
பிரதிக்ஷா அமைப்பு மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தியுள்ளோம். தெலுங்கானா கைத்தறித்துறை தூதுவராக இருக்கிறேன். நெசவாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். தமிழக அரசு கேட்டால் இங்கேயும் தூதுவராக தயார்.
ரஜினி, கமல் யாருக்கு உங்கள் ஆதரவு?
அரசியல் பற்றி சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது. சினிமா மட்டும்தான் தெரியும்.
திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டு விடுவேன் என்று நாக சைதன்யா கவலைப்பட்டார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில் எதிர்காலத்தில்கூட ஏற்படலாம். அவரோடு நிறையச் சண்டை போடுவேன். ஆனால், நாங்க சண்டை போடுறோம் என்பது பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக்கூடத் தெரியாது. சத்தத்தைக் கூட்டாமல், இருவரும் ஜாலியாகச் சண்டை போட்டுப்போம். பார்ப்பவர்கள் ஏதோ ரகசியம் பேசிட்டு இருக்காங்கன்னு நினைப்பாங்க. குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணர வைத்ததுதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு’ என்றார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் - அர்ஜுன் - சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் விமர்சனம்.
ராணுவத்தில் உயரிய பொறுப்பில் இருகிறார் நாயகன் விஷால். கிராமத்தில் வசிக்கும் தன் அப்பா டெல்லி கணேஷ், அம்மா, தங்கை என யாரிடமும் அதிக தொடர்பு இல்லாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
டெல்லி கணேஷ் ஊர் முழுவதும் கடன் வாங்கி பல செலவுகள் செய்கிறார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான விஷாலின் அம்மா உயிரிழக்கிறார்.
இதற்கிடையே சென்னையில் விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டில் உள்ளவரின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது. இதனால், அவர் தற்கொலை செய்துவிடுகிறார். அவருக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து மனைவி மட்டும் மகளிடம் பணம் கேட்பது போல் தவறாக நடந்துக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் விஷால் அவர்கள் மீது கோபப்பட்டு அடித்து விடுகிறார்.
இது போலீஸ் நிலையம் வரை சென்று விஷாலின் வேலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விஷாலின் உயரதிகாரி, மன அழுத்தம் சரியாக இருக்கிறதா அறிந்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வரும் படி அனுப்புகிறார்.
அதன்படி மருத்துவர் சமந்தாவை சந்திக்க செல்கிறார் விஷால். சமந்தாவோ உங்கள் குடும்பம் மீது அக்கறை காட்டுங்கள். அவர்களுடன் பழகுகள் என்று அறிவுரை கூறி அனுப்ப, கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார்.
அங்கு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். இதற்கு 10 லட்சம் தேவைப்படுகிறது. இதற்காக தன் அம்மாவின் சொத்தை விற்று 4 லட்சம் ஏற்பாடு செய்கிறார். மீதமுள்ள 6 லட்சத்திற்கு வங்கி சென்று கடன் வாங்க முயற்சி செய்கிறார். ஆனால், ராணுவ வீரர் என்பதால் கடன் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.
பின்னர், புரோக்கர் மூலமாக போலி ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்குகிறார் விஷால். சொத்தை விற்று 4 லட்சம், லோன் 6 லட்சம் ஆக 10 லட்சம் பணத்தை வங்கி வைத்திருக்கிறார். ஆனால் திடீரென 10 லட்சம் பணமும் காணாமல் போகிறது. அதிர்ச்சியடையும் விஷால், எப்படி காணாமல் போனது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதுபோல் பலருடைய வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் பணம் காணாமல் போகிறது என்பதை தெரிந்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜுன் தான் இதற்கு காரணம் என்று கண்டறிகிறார்.
இறுதியில் அர்ஜுனை விஷால் எப்படி நெருங்கினார்? பணம் எப்படி காணாமல் போகிறது? பணம் அவருக்கு திரும்ப கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகன் விஷால், அவருக்கே உரிய பாணியில் திறமையாக நடித்திருக்கிறார். இராணுவ அதிகாரியாக கம்பீரமாகவும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் அண்ணனாகவும், பணம் பறிபோன பிறகு, கண்டுபிடிக்க அசுர வேகத்தில் முயற்சி செய்வது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷால்.
நாயகியாக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு அருமை. துறுதுறுவென ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுனின் நடிப்பு மிரள வைத்திருக்கிறது. மாடர்ன் வில்லனாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். விஷாலின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், வெகுளித்தனமாக நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனதில் நிற்கும் கதாபாத்திரம்.
வித்தியாசமான திரைக்கதையை கையில் எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கதைக்களத்தை உருவாக்கி, தெளிவான திரைக்கதை அமைத்திருக்கிறார். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்படும் விளைவுகளை அழகாக பதிவு செய்திருக்கிறார். நம்மளுடைய தகவல்களை இன்டர்நெட்டில் பதிவு செய்து வைத்தால், என்னென்ன விளைவுகள் வரும் என்பதை காண்பித்திருக்கிறார். கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து, அவர்களிடம் சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ அசைக்க முடியாது.
விஷால் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ படத்தை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் மேலும் ஒரு விருந்தாக மற்றொரு படத்தின் டிரைலரை வெளியிட்டிருக்கிறார். #Vishal
விஷால் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘சண்டக்கோழி 2’ படத்தின் டிரைலரும் இன்று வெளியாகி இருக்கிறது.
இந்த டிரைலரும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. ஒரே நாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்திருக்கிறார் விஷால்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் `இரும்புத்திரை' படத்தின் முன்னோட்டம். #Irumbuthirai #Vishal
விஷால் பிலிம் பாக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்துள்ள படம் `இரும்புத்திரை'.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு - ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒலி வடிவமைப்பு - டபாஸ் நாயக், பாடல்கள் - கபர் வாசுகி, விக்னேஷ் சிவன், விவேக், கலை - உமேஷ் குமார், ஸ்டன்ட் - திலீப் சுப்பராயன், எடிட்டிங் - அந்தோணி எல்.ரூபன், தயாரிப்பு - விஷால், எழுத்து, இயக்கம் - பி.எஸ்.மித்ரன்.
சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. வருகிற மே 11-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. #Irumbuthirai #Vishal
விஷாலின் இரும்புத்திரை மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் திட்டமிட்டு நடந்ததா என்று தமிழ் சினிமாவில் சர்ச்சை பேச்சு அடிபடுகிறது. #IAK #Irumbuthirai
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. அப்படி மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தத்தை பெரும்பான்மையானோர் ஆதரித்தாலும் சில எதிர்ப்புக் குரல்களும் எழுந்தன.
அப்படி எழுந்த எதிர்ப்புக்குரல்களில் அருள்நிதியும் ஒருவர். ‘வேலை நிறுத்தம் செய்யாமலேயே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். இதற்காகவா உங்களை பதவியில் அமர வைத்தோம்?’ என்று நேரடியாக விமர்சித்தார்.
நாளை (வெள்ளிக்கிழமை) விஷால், அருள்நிதி நடித்த படங்கள் நேரடியாக மோது கின்றன. ஜனவரி முதல் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்ட விஷாலின் இரும்புத்திரை படமும், அருள்நிதி நடிப்பில் உருவான இரவுக்கு ஆயிரம் கண்கள் படமும் வெளியாகின்றன. இது எதேச்சையாக நிகழ்ந்ததா? இல்லை திட்டமிட்டு இருவரும் வெளியிடுகிறார்களா? என்ற சர்ச்சை தமிழ் சினிமாவில் ஓடுகிறது. #IAK #Irumbuthirai
×
X