என் மலர்
முகப்பு » இளைராஜா
நீங்கள் தேடியது "இளைராஜா"
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகி வந்த ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Maamanidhan #VijaySethupathi
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் நடந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங் பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், இசைஞானியின் இசையை கேட்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
It's a wrap for #maamanithan.All credit goes to my cast and crew for their effort and hard work.Eager to listen the songs and BGM from Isaignani for our canned visuals. Dubbing starts shortly @thisisysr@vijaySethuOffl@irfanmalik83@sreekar_prasadpic.twitter.com/1r5gCDlpzK
— Seenu Ramasamy (@seenuramasamy) February 12, 2019
இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #Gayathrie #YuvanShankarRaja #MaamanidhanWrap
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார். #Maamanidhan #VijaySethupathi
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
#மாமனிதன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் தம்பி லியோ சிவக்குமார்.திறன்மிகு கலைஞர்.இவர் நாடறிந்த பேச்சாளர் திரு.லியோனி அவர்களின் புதல்வர்.முறைப்படி எங்கள் நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று படத்தில் நடிக்கின்றார். pic.twitter.com/HEsxbbJd8G
— Seenu Ramasamy (@seenuramasamy) January 8, 2019
இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கும் இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். #Maamanidhan #VijaySethupathi #SeenuRamasamy #YuvanShankarRaja #LeoSivakumar
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Maamanidhan #VijaySethupathi
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை.
இதையடுத்து விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் தர்மதுரை படத்தில் நடித்தது போல இந்த படத்திலும் விஜய் சேதுபதி கலகலப்பான, அமைதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக யுவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Maamanidhan #VijaySethupathi
இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் காப்புரிமை பற்றி குற்றவியல் வழக்கின் தீர்ப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். #Ilayaraja
இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்கள் பற்றிய காப்புரிமை வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:-
நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த கோர்ட்டால் பிறப் பிக்கப்பட்ட தடை செல்லும்.
அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும். நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.
சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.
அதில் நீதிபதி எக்கோ நிறுவனம் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என்று அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சிலர் என்னுடைய வழக்கே ரத்து என்று செய்தி வெளியிடுகிறார்கள். 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Ilayaraja
×
X