search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எக்ஸ்பாக்ஸ்"

    • ப்ளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எஸ் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் எக்ஸ்பாக்ஸ் மாடல்களின் விலை இந்திய சந்தையில் உயர்த்தப்பட்டது.

    எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் அதன் அறிமுக விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் கேமிங் கன்சோல் தற்போது ப்ளிப்கார்ட் தளத்தில் 10 சதவீத தள்ளுபடி பெற்று இருக்கிறது. சமீபத்தில் இதன் விலை ரூ. 55 ஆயிரத்து 990 என உயர்த்தப்பட்டது.

    தற்போது இந்த கன்சோலின் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. ஜனவரி 8 ஆம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் ஜனவரி 5 ஆம் தேதி துவங்கிய பிக் பச்சட் தமால் சேல் ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் அங்கமாக எக்ஸ்பாக்ஸ் மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தள்ளுபடி தவிர, பேங்க் ஆஃப் பரோடா, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் மற்றும் எஸ் வங்கி என தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் விலையை உயர்த்தியது. இது நான்கு மாதங்களில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது விலை உயர்வு ஆகும். இம்மாத துவக்கத்தில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடலுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

    விரைவில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் விலை ரூ. 39 ஆயிரத்து 990 என மாற இருக்கிறது. இது அதன் முந்தைய ரூ. 37 ஆயிரத்து 990 விலையை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். தற்போது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல் ப்ளிப்கார்ட் பிக் பச்சட் தமால் சேல் விற்பனையில் ரூ. 32 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது டிஜிட்டல் வெர்ஷன் மற்றும் 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்டிற்கான விலை ஆகும்.

    இதுதவிர எக்ஸ்பாக்ஸ் அக்சஸரீக்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலரின் ரோபோட் வைட் வேரியண்டிற்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை தற்போது ரூ. 5 ஆயிரத்து 199 என மாறி இருக்கிறது. இதன் கார்பன் பிளாக் எடிஷன் விலை ரூ. 5 ஆயிரத்து 390 என்றும் சூப்பர் பிரைட் எலெக்ட்ரிக் வோல்ட்/ஃபுளுரோசெண்ட் கிரீன் வயர்லெஸ் கண்ட்ரோலர் விலை ரூ. 5 ஆயிரத்து 890 என மாறி இருக்கிறது.

    ×