என் மலர்
நீங்கள் தேடியது "எண்ணூர்"
- எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்.
- அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அப்போது, கூட்டத்தில் பேசிய சீமான், "சமீப காலமாக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டங்களில் நியாயமாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிப்பதில்லை. இக்கருத்து கேட்பு கூட்டத்திலும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று கருத்துகளை பெறவேண்டும்" என்றார்.
மேலும் அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார் அவர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சீமான் வெளியேற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கருத்து கேட்பு கூட்டம் குறித்து சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறுகையில், "பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது" என்றார்.
பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது.… https://t.co/KewJq8Jn9n
— G. Sundarrajan (@SundarrajanG) December 21, 2024
- இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை.
- கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது.
எண்ணூர்:
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் ஏராளமான மீன்களும், இறால்களும் அதிக அளவில் கிடைக்கும். இதனை நம்பி 10 மீனவ கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கொசஸ்தலை ஆறு இணையும் பகுதி முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு வெளியேற்றப்படும் கழிவு நீரால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் இறால், மீன் இனப்பெருக்கம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் இதேபோல் எண்ணூர் முகத்துவார பகுதி அடிக்கடி மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-
எண்ணூர் முகத்துவார பகுதி ஆண்டுதோறும் பல நாட்கள் மஞ்சள் நிறமாக மாறி காட்சி அளித்து வருகிறது.
ஆற்றை சுற்றி இருக்கும் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் மற்றும் ரசாயனம் கலந்து வருவதால் ஆற்றின் நிறம் மாறுகிறது. இதனால் ஆற்றில் இருக்கும் மீன்கள் மற்றும் இறால்கள் இனப்பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் கொசஸ்தலை ஆற்றை நம்பி இருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே எண்ணூர் முகத்துவாரத்தை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் எண்ணூரில் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் நிறமாக வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை ஆய்வு மேற்கொண்டார்.
எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் மிச்சாங் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எண்ணெய் கழிவுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை நாசப்படுத்தியது. பின்னர் எண்ணூர் முகத்துவார பகுதியில் போய் கடலில் கலந்தது.
இந்த எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந் தேதியில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 75 படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி வருகிறார்கள். நவீன எந்திரங்கள் மூலமாகவும் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்படும் இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
பைபர் படகில் சென்று எண்ணெய் கழிவு பாதிப்புகளை அவர் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், " இங்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தைவிட பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவுப்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவு அகற்றுவது போல் ஒரு அறிகுறியும் இங்கு இல்லை.
எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.
எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கொருவர் பழி போட்டு வருகின்றனர்.
எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் அச்சம் ஏற்படும்.
இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
- ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது.
- தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து மிதவையை ஆய்வு செய்தனர்.
எண்ணூர்:
மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடலில் கிடந்த சிறிய அளவிலான கற்கள் மரங்களை சாலையில் தூக்கி வீசியது.
இந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் அருகே கடற்கரையில் இரும்பிலான ராட்சத மிதவை ஒன்று கரை ஒதுங்கியது. இது ராட்சத கேஸ் சிலிண்டர் போன்று காட்சியளித்ததால் பொதுமக்கள் பயந்து போய் எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீஸ் விரைந்து வந்து அந்த மிதவையை ஆய்வு செய்தனர். அப்போது, கப்பல்களின் ராட்சத இரும்பு சங்கிலி மூலம் நங்கூரத்தில் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் மிதவை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.