என் மலர்
முகப்பு » கேலக்ஸி ஏ30
நீங்கள் தேடியது "கேலக்ஸி ஏ30"
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மூன்று கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. #GalaxyA #Smartphone
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 என மூன்று புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கியிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
மூன்று ஸ்மார்ட்போன்களில் டாப் எண்ட் மாடலான கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
கேலக்ஸி ஏ10 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 7884பி சிப்செட்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக் வசதி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 5 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு பை
கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 7904 சிப்செட்
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு பை
கேலக்ஸி ஏ50 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- எக்சைனோஸ் 9610 ஆக்டாகோர் சிப்செட்
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 25 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் சார்ஜிங்
- ஆண்ட்ராய்டு பை
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,490 என்றும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என்றும் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் ரூ.19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2 ஆம் தேதி முதல் கிடைக்கும். கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் நிறுவனம் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #GalaxyM30 #Smartphone
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர் கொண்டு இயங்கும் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மாஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்30 கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மார்ச் 7 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyA30 #Smartphone
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கும் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ30 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 5 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் இந்திய விற்பனை பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #GalaxyM30 #Smartphone
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்கள் சீன நிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் வகையில் அறிமுகமாகி இருக்கும் நிலையில் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 27 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் வெளியிட்டுள்ளது.
சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசர்களின் படி சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி வி ரக டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்க இருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 13+5+5 எம்.பி. கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் வழக்கமான கேமரா லென்ஸ், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படிருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் சூப்பர் AMOLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்30 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14nm பிராசஸர்
- மாலி-G71 GPU
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. அல்ட்ரா-வைடுஆங்கிள் கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.14,990 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதன் விற்பனை மார்ச் மாத முதல் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. #GalaxyM30 #Smartphone
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 சிப்செட், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்20 போன்று கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பல்வேறு சீன ஸ்மார்ட்போன்களை போன்று சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லாஷ்லீக்ஸ் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2220 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 16 எம்.பி. கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் புளு, பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் SM-M305F என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
திரிபுரா மாநிலத்தின் காலியாக உள்ள 3 ஆயிரத்து 386 இடங்களுக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #TripuraPanchayatByelections
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் சுமார் 3 ஆயிரத்து 386 உள்ளாட்சி இடங்கள் காலியாக உள்ளன. இங்கு வேட்பாளர்கள் இறப்பு மற்றும் ராஜினாமா போன்ற காரணங்களால் அந்த இடங்கள் காலியாகின.
பஞ்சாயத்து, பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜில்லா பரிஷத் என காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 30-ம் தேதி உள்ளாட்சிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 3-ம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. #TripuraPanchayatByelections
ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஃபாஸ்ட்பேக் N காரின் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூன்டாய் மோட்டார், புதிய i30 ஃபாஸ்ட்பேக் N காரின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ஹூன்டாய் i30 ஹேட்ச்பேக் மாடலுடன் i30 N ஹாட் ஹேட்ச் மற்றும் i30 டூரர் எஸ்டேட்/ஸ்டேஷன் வேகன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N மாடல் பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹூன்டாய் தனது ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்து வருகிறது.
இறுதிகட்ட பணிகளுக்கு முன் அதிக செயல்திறன் கொண்ட காரினை முழுமையாக சோதனை செய்வதில் ஹூன்டாய் கவனமாக உள்ளது. இதன் காரணமாக புதிய கார் பலக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூழல்களில் கார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
அதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹூன்டாய் i30 ஃபாஸ்ட்பேக் N மாடல் பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், ஹூன்டாய் தனது ப்ரோடோடைப் மாடலை சோதனை செய்து வருகிறது.
இறுதிகட்ட பணிகளுக்கு முன் அதிக செயல்திறன் கொண்ட காரினை முழுமையாக சோதனை செய்வதில் ஹூன்டாய் கவனமாக உள்ளது. இதன் காரணமாக புதிய கார் பலக்கட்ட சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூழல்களில் கார் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
அதன் படி ஐரோப்பாவின் பல பகுதிகளில் துவங்கி, ஜெர்மனியின் பிரபல நார்ட்ஷெலைஃப் சர்கியூட் போன்ற இடங்களில் புதிய ஹூன்டாய் கார் சோதனை செய்யப்படுகிறது. பந்தயங்கள் நடைபெறும் டிராக் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் சோதனை செய்வதன் மூலம் காரின் செயல்திறன் மற்றும் உறுதி தன்மையை கணக்கிடப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகமான i30 ஃபாஸ்ட்பேக் கார் கூப் பிரிவு வாகனங்களில் ஐந்து கதவுகள் கொண்ட ஒற்றை வாகனமாக இருக்கிறது. அந்த வகையில் புதிய i30 ஃபாஸ்ட்பேக் N ஹூன்டாய் விற்பனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவதாக கூறப்படுகிறது.
×
X