என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.400"
- காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர மக்களவைத் தொகுதி எம்.பி.-யுமான சசி தரூர் பாஜகவை கிண்டலடித்து உள்ளார்.
- மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான இடதுசாரி எதிர்க்கதசியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 இடங்களில் 411 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மாறாக ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை இல்லாத அளவில் 121 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இதை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர மக்களவைத் தொகுதி எம்.பியுமான சசி தரூர் பாஜகவை கிண்டலடித்து உள்ளார். அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணி காட்சிகளில் தயவில் மீண்டும் ஆட்சியமைத்தது. மோடி முன்மொழிந்த இந்த தேர்தல் முழக்கம் தேர்தலோடு காலாவதியானதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தொடங்கின.
இந்த பின்னணியிலேயே, 'ஒரு வழியாக 400 இடங்களில் வெற்றி என்பது நடந்துவிட்டது ஆனால் வேறொரு நாட்டில்' என்று பாஜகவை கிண்டலடித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த முறை 400 இடங்கள் உறுதி என்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார வசனத்தை அவர்கள் பக்காமே திருப்பிவிட்டுள்ள சசி தரூரின் பதிவுக்கு இணையவாசிகள் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர்.